Chow Chow health benefits: சௌ சௌ சாப்பிட்டால் உடலுக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா..?
Chow Chow health benefits: சௌ சௌ சாப்பிட்டால் உடலுக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா..?
நம் நாட்டில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் இருந்தபோது, மரங்கள் காய்கறி, பழங்கள் போன்ற, நிறைய மேலை நாட்டு தாவரவகைகள் நம் நாட்டிற்கு வந்தன.

Chow Chow health benefits:
அவையெல்லாம், அவர்களின் தேவைகளுக்காக மட்டுமே இங்கு வந்தன. அந்த காய்கறி, பழ மர வகைகள் எல்லாம், நமது நாட்டில், அவை வளருவதற்கு ஏற்ற குளிர் பிரதேசங்களிலும் மற்றும் மலை வாழிடங்களிலும் பயிரிடப்பட்டன. அப்படி வந்த மேலை வகை காய்கறிகளில், ஒன்றுதான், சௌ சௌ.
சமையலுக்கு விருப்பமான ஒரு காயாகத் திகழும் சௌ சௌ, தமிழகத்தில் உள்ள மலைகள் மற்றும் மலை அடிவாரங்களில் அதிக அளவில் விளைவிக்கப்படுகின்றன.
சௌ சௌ கொடி வகையைச் சார்ந்த தாவரம் ஆகும் .இதன் விதைகளை நிலத்தில் இட்டு, அவை முளைத்த பின் எடுத்து, வேறு இடங்களில் நட்டு வளர்க்கப்படுகின்றன.
பந்தலில் படரும் கொடிகளில் இருந்து, விதைகளை தனியாக எடுத்து, நட்ட மூன்று மாதங்களில் பூக்கத் தொடங்கி, நான்காவது மாதத்தில் இருந்து, காய்த்து, ஓராண்டு வரை தொடர்ந்து காய்களைக் கொடுக்கும், தன்மை மிக்கது.
இந்த சௌ சௌ காய்களில் புரதம், வைட்டமின் C, கால்சியம், பொட்டாசியம் சத்துக்களுடன் நீர்ச் சத்தும் நிறைந்துள்ளது ..
சௌ சௌ இரத்த அழுத்த பாதிப்புகள், வயிறு தொடர்பான பிரச்னைகளை சரி செய்கிறது. கருவுற்ற மகளிருக்கு சிறந்த ஊட்டத்தை அளிக்கும் காயாக, சௌ சௌ திகழ்கிறது.
உடல் தளர்ச்சிகளை போக்கி, தசைகளை வலுவாக்கி, நரம்பு தளர்ச்சி பாதிப்புகளை சரி செய்யும் ஆற்றல் மிக்கதாக சௌ சௌ திகழ்கிறது .
இவை வயிற்று நச்சுக்களை நீக்கி, உடலை சரியாக்கும் தன்மை கொண்டவை. மேலும் மலச்சிக்கல் பாதிப்பில் இருந்து விடுபட வைத்து, குடல் பாதிப்புகளை சரியாக்குகிறது.
குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு:
சௌ சௌவில் உள்ள கால்சியம் சத்து, குழந்தைகளின் உடல் வளர்ச்சிகளை ஊக்கப் படுத்தி, அவர்கள் எலும்பு வளர்ச்சியை வலுவாக்கும்.
எனவே அவர்கள் உணவில் சௌ சௌவை சேர்த்து சாப்பிட கொடுப்பதால் குழந்தைகள் மிகுந்த ஊட்டமும், உடல் நலமும் பெறுவர்.
கருவுற்ற காலத்தில் சில பெண்களுக்கு, கை கால்களில் நீர் கோர்த்தது போன்ற வீக்கங்கள் ஏற்படும்.
இந்த வீக்கங்களை சரி செய்ய, சௌ சௌவை அடிக்கடி உணவில் சேர்த்தால் போதும் .
மேலும், கருவில் உள்ள குழந்தையினை தொற்றுக்களில் இருந்து காக்கக் கூடியது, இந்த சௌ சௌ.
சௌ சௌவில் உள்ள தாமிரம், மாங்கனீசு போன்ற தாதுக்கள் தைராய்டு சுரப்பிகளின் பாதிப்பால் ஏற்படும் கோளாறுகள் விலக உதவுகிறது.
சௌ சௌவில் உள்ள ஆற்றல் மிக்க வைட்டமின் வேதிப் பொருட்கள், புற்று நோயினை ஏற்படுத்தும் கிருமிகளை, உடலினுள் நுழைய விடாமல்தடுக்கின்றது.
சிலருக்கு வயிறு மற்றும் இடுப்பில், அதிகமாகக் கொழுப்புகள் இருக்கும். இதனால் நடக்கும் போதும், உட்கார்ந்து எழும் போதும், ஓர் தடுப்பினை ஏற்படுத்தும்.
இந்த அதிகப்படியாக வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்ற, சௌ சௌ சூப் உதவி செய்யும்.
சிலருக்கு, இள வயதிலேயே, உடலில், முகத்தில் சுருக்கங்கள் தோன்றி, வயது முதிர்ந்த தோற்றத்தை உண்டாக்கி, அவர்களுக்கு, மனச் சோர்வை அளித்து விடும்.
Also Read: Drying off after shower: குளித்து முடித்த உடன் முதலில் தலையை துவட்டக்கூடாது ஏன் தெரியுமா..?
ஆகவே உணவில் அடிக்கடி சௌ சௌவை சேர்த்து சாப்பிட்டு வர, முகம் மற்றும் உடலில் இருந்த சுருக்கங்கள் எல்லாம் விலகி, உடல் பொலிவு பெறும்.
எனவே, அனைத்து வயதினரும் சௌ சௌ காய்களை, உணவில் அவ்வப்போது சேர்த்து வர, கடுமையான வியாதிகள், உடலை அணுக விடாமல் தடுக்கலாம்.