Tamil NewsTamil Technology Newsஅறிவியல்செய்திகள்

Cause of Insomnia: மூளையின் செயல்பாட்டை பாதிக்குமா ஓரெக்சின்..! ஆய்வாளர்களின் கருத்து என்ன..?

Cause of Insomnia: மூளையின் செயல்பாட்டை பாதிக்குமா ஓரெக்சின்..! ஆய்வாளர்களின் கருத்து என்ன..?

நம் முன்னோர்கள் உணவே ஆரோக்கியம் என்று சொல்வார்கள்.

நாம் எடுத்துக்கொள்ளும் சரியான உணவுப்பழக்கம் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க உதவும் வகையில் இருக்கும்.

Cause of Insomnia

Cause of Insomnia:

அதன் அடிப்படையில்,  ஓரெக்சின் செல்கள் அல்லது ஹைபோகிரெடின் (Orexin cells or hypocretin) இவை இரண்டும் மனித உடலின் மூளையில் தூக்கம் மற்றும் விழிப்பு சுழற்சியின் முக்கிய modulator-களாக செயல்படுகின்றன.

உணவு மற்றும் ஓரெக்சின் செல்கள் இவை இரண்டும் மனித நடத்தையை எவ்வாறு பாதிக்கிறது என்பதை வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர். அவற்றை மேலும் விரிவாக காணலாம்.

நாம் வழக்கமாக செய்யும் செயல்களில் மாற்றத்தை கொண்டுவரும் போது அது நமது விருப்பம் என்றும், நமது செயல்களுக்கும் பெருமைகளுக்கும் நாமே காரணம் என்றும் நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

ஆனால், நம்முடைய ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கு தேவையான முக்கியமான எளிய விஷயங்களைக் கூட நாம் கூடவே தவற விடுகிறோம்.

பொதுவாக நாம் செயல்பாட்டில் இருக்கும் போதும், செயல் இல்லாமல் இருக்கும் போதும் நமது மூளையை சரியாக இயங்க வைப்பதற்கு மன உறுதி மட்டுமே போதுமானது.

ஆனால், பெரும்பாலான மக்கள் தூக்கமின்மையால் பாதிக்கப்படுகின்றனர். அது நம் மனதின் கட்டுப்பாட்டில் இல்லை.

நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் சரி சமமான நிலையில் இல்லை என்றால், அது மூளையின் செயல்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்தி இந்நிலைக்கு உள்ளாக்குகிறது.

Facts of Brain

நமது மூளையில் உள்ள ஆழமான பகுதியான ஹைபோதாலமஸ், “ஓரெக்சின் எனப்படும் ஹைபோகிரெடினை உருவாக்குகிறது”.

இது நமது மூளைக்கு முக்கியமான விழிப்புணர்ச்சியை கொடுக்கிறது. இந்த உள் உணர்வுப்பகுதி எவ்வாறு செயல்படுகின்றது என்பதைப் பற்றிய ஆய்வுகள், பல உண்மைகளை வெளிப்படுத்தியிருக்கின்றன.

ஓரெக்சின் செல்கள் 1998 இல் கண்டுபிடிக்கப்பட்டன. ஓரெக்சின் செல்கள், மறதி, தூக்கக் கோளாறு போன்றவற்றை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

நார்கோலெப்ஸி(Narcolepsy) என்பது மூளையில் உள்ள நிலையின் ஒரு பகுதியாகும்.

இது மூளையின் நிலைகளுக்கு இடையில் அடிக்கடி மாறுதல்கள் மற்றும் தூக்கம், அல்லது விழிப்புணர்வை இழத்தல் போன்ற செயல்களை செய்கின்றன.

ஓரெக்சின் செல் தூண்டுதல் விழிப்புணர்வை உருவாக்குகிறது மற்றும் உடலில் செயல்பாடுகளை அதிகரிக்கிறது.

இது நம் இதயம் மற்றும் பிற உறுப்புகளைப் போலவே செயல்படுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், துல்லியமாக இதன் வேலை என்ன என்பது தெரியவில்லை.

மேலும் ஓரெக்சின்  செயல்பாட்டை பற்றி அறிய விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

How does Orexin work?

அடுத்து ஓரெக்சின் செல்களை சுறுசுறுப்பாக வைத்திருப்பதில் உணவின் பங்கு என்ன என்பதை தெரிந்துகொள்வோம்.

உணவுகளின் மூலம், ஓரெக்சின் செல்கள் சிக்னல்களின் செயல்பாடு மாற்றமடையலாம்.

ஓரெக்சின் செல்களுக்கு சக்திவாய்ந்த தடுப்பான் குளுக்கோஸ் ஆகும். நம் உடலில் குளுக்கோஸின் அளவு உயரும் போது, செல்கள் தூண்டும் ஆற்றலை வெளிப்படுத்துவதை நிறுத்துகின்றன.

ஆனால், இதற்கு நேர்மாறாக, உணவில் உள்ள அமினோ அமிலங்கள், ஓரெக்சின் செல்களை தூண்டும் ஆற்றலை வெளிப்படுத்துகின்றன.

Also read: Food For Weight Loss: உடல்கழிவுகளை வெளியேற்றி எடையை குறைக்க உதவும் உணவுகள்..!

முட்டை அல்லது பன்னீர் போன்ற புரதங்களைக் கொண்ட உணவுகளும் ஒரெக்சின் செல்களை ஊக்குவிக்கின்றன.

ஓரெக்சின் செல்கள் விழித்திருக்க போதுமான தூண்டுதல்களை நம் மூளைக்கு கொடுப்பதன் மூலம் மூளையும் விழித்திருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *