இயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Carrot Benefits: அழகான கூந்தலுக்கு கேரட் எண்ணெய்யை பயன்படுத்துங்கள்..!

Carrot Benefits: அழகான கூந்தலுக்கு கேரட் எண்ணெய்யை பயன்படுத்துங்கள்..!

அழகான கூந்தல் இருக்க வேண்டும் என்ற ஆசையா? அப்படி என்றால் கேரட் எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.

Carrot benefits - newstamilonline

கேரட்டில் உள்ள வைட்டமின் ‘ஏ’ சத்து கண்களுக்கு பலம் கொடுக்க கூடியது. கேரட் கிருமிகளை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கேரட்டில் எண்ணெய் தயாரித்து பயன்படுத்தலாம். இந்த கேரட் எண்ணெய்யைப் பயன்படுத்துவதால் நீங்கள் இளமையாகவும் தோன்ற முடியும்.

கேரட் எண்ணெய், வறண்ட சேதமடைந்த கூந்தலுக்கு ஒரு இயற்கையான புத்துணர்ச்சியைத் தருகிறது. கேரட் எண்ணெய் பயன்படுத்துவதால் பல்வேறு நன்மைகள் உடலுக்குக் கிடைக்கிறது. குளிர் காலத்தில் மற்றும் மழைக் காலங்களில் சருமம் வறண்டு இருப்பதால், கேரட் எண்ணெய் பயன்படுத்தி சருமத்திற்கு ஈரப்பதம் அளிக்கலாம். குறிப்பாக பாத வெடிப்புகள் மற்றும் தோல் உரிவது போன்றவை மழைக் காலங்களில் அடிக்கடி ஏற்படும் பாதிப்பாகும். இதனைப் போக்க கேரட் எண்ணெய் சிறந்த முறையில் உதவுகிறது.

Carrot oil benefits - newstamilonline

கேரட் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள்:

கேரட் அல்லது ஆர்கானிக் கேரட் – 2 அல்லது 3.

ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் .

கேரட் துருவி, வடிகட்டி, கிராக் பாட் அல்லது பேன்

ஒரு சுத்தமான கண்ணாடி குடுவை

Carrot oil benefits - newstamilonline

செய்முறை:

கேரட்டை தோல் சீவி துருவிக் கொள்ளவும். துருவிய கேரட்டை ஒரு பேன் அல்லது கிராக் பாட்டில் போடவும். உங்களுக்கு விருப்பமான ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்யை சேர்க்கவும்.

கேரட் துருவல் முழுவதும் மூழ்கும் அளவிற்கு எண்ணெய்யை ஊற்றவும். இப்படி செய்வதால் கேரட் முழுவதும் எண்ணெயில் ஊறி அடியில் தங்கி விடும்.

நன்றாக ஊறியவுடன் கேரட் மிகவும் மென்மையாக மாறி, அந்த எண்ணெய் முழுவதும் ஆரஞ்சு நிறமாக மாறி விடும்.

அப்போது அடுப்பை நிறுத்திவிட்டு ஆற விடவும். அடுத்த 24 மணி நேரம் இந்த கேரட் எண்ணெயிலேயே ஊறட்டும்.

ஆறியவுடன், ஒரு வடிகட்டி பயன்படுத்தி எண்ணெய்யை வடிகட்டிக் கொள்ளவும். பிறகு அதனை ஒரு கண்ணாடி குடுவையில் ஊற்றி வைக்கவும்.

Carrot oil benefits:

இப்படி தயாரிக்கும் கேரட் எண்ணெய் கூந்தலுக்கு பல அற்புதங்களை செய்கிறது. தலைக்கு ஷாம்பூ தேய்த்து குளிப்பதற்கு முன்னால் இந்த எண்ணெய்யை தலையில் தடவிக் கொள்ளலாம்.

Also Read: Oats சாப்பிடும்போது நாம் செய்யும் சில தவறுகள்..!

இப்படி செய்வதால் உங்கள் கூந்தல் எண்ணெய்யை உறிஞ்சி, தலை முடிக்கு ஈரப்பதம் அளித்து, அழகாக்குகிறது. இந்த கேரட் எண்ணெயில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் பீட்டா கரோடின் போன்றவை சிறந்த கண்டிஷனராக செயல்படுகிறது.

இதில் இருக்கும் வைட்டமின் ஈ சத்து, உங்கள் கூந்தல் மற்றும் உச்சந்தலையை சேதங்களில் இருந்து பாதுகாக்கிறது. மேலும் இது முடி உதிர்வைத் தடுத்து, கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.