Interesting FactsTamil Newsஇயற்கையோடு வாழ்வோம்கண்டுபிடிப்புசெய்திகள்

Milk Benefits: கறந்த பாலை அப்படியே குடிக்கலாமா..?

Milk Benefits : கறந்த பாலை அப்படியே குடிக்கலாமா..?

பசும் பாலானது மிகவும் சத்து மிகுந்ததாக கருதப்படுகிறது. இதை குளிர்வித்தோ அல்லது பச்சையாகவோ பருகும் பழக்கம் அனைவரிடமும் இருக்கிறது. காய்ச்சாத பாலை குடித்தால் என்ன நடக்கும்ன்னு உங்களுக்கு தெரியுமா?

Cow Milk

சமீபத்திய ஆராய்ச்சி ஒன்றில் கறந்த பசும் பாலை பச்சையாக பருகுவதால் பல நோய்கள் மற்றும் உணவு மூலம் பரவக் கூடிய நோய்கள் வர வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கறந்த பாலை(Cow Milk) அப்படியே குடித்தால் பாக்டீரியா மூலம் பரவக் கூடிய நோய்கள் உடலில் வருவதற்கும் வழிவகுக்குமாம்.

மேலும், கலிபோர்னியா பல்கலைக்கழகம் (University of California, Davis) அமெரிக்காவின் பல பகுதிகளிலிருந்து எடுக்கப்பட்ட 2000 க்கும் அதிகப்படியான பால் மாதிரிகளை பரிசோதனை செய்தது.

இதில் கறந்த பச்சை பால் மற்றும் பல வழிகளில் பதப்படுத்தப்பட்ட (pasteurised) பால் ஆகிய இரண்டும் உட்படும்.

அறை வெப்பநிலையில் கறந்த பாலை வைத்திருக்கும் போது அதிக அளவிலான ஆண்டிபயாடிக் எதிர்ப்பு நுண்ணியிர்கள் (antibiotic-resistant microbes) இருப்பதற்கான வாய்ப்பு கண்டறியப்பட்டன.

ஆண்டிமைக்ரோபையல்-எதிர்ப்பு மரபணுக்களைக் கொண்ட பாக்டீரியாக்கள், ஒரு நோய்க்கிருமிக்கு (pathogen) அனுப்பப்பட்டால், அது “superbugs ஆக மாறும் திறன் உள்ளது.

இதனால் நோய்த்தொற்று அல்லது நோய்க்கு சிகிச்சையளிக்கும் மருந்துகள் வேலை செய்யாத நிலை ஏற்படுமாம்.

ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 3 மில்லியன் மக்கள் ஆண்டிபயாடிக் எதிர்ப்பு நோய்த்தொற்றை உருவாக்குகின்றனர். மேலும் 35,000க்கும் அதிகமானோர் இறக்கவும் செய்கின்றனர் என Centers for Disease Control தெரிவித்துள்ளது.

Also Read: Benefits Of Curd: தயிர் எடுத்து கொள்வது நன்மையா..! தீமையா ..!

இந்த ஆய்வுக்கு மக்களை பயமுறுத்தும் எண்ணம் இல்லை மாறாக அவர்களை பயிற்றுவிப்பது தான் நோக்கம் என ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்னும் நீங்கள் கறந்த பச்சை பாலை குடிக்க விரும்பினால், அதை குளிர்சாதன பெட்டியில் வைத்து அது ஆண்டிபயாடிக் எதிர்ப்பு மரபணுக்களுடன் பாக்டீரியாவை உருவாக்கும் அபாயத்தை குறைத்துவிட்டு பருகுங்கள் என ஆய்வாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.