Broccoli Benefits for Health: ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த ப்ராக்கோலி..!
Broccoli Benefits for Health: ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த ப்ராக்கோலி..!
பச்சைப் பூக்கோசு என்று அழைக்கப்படும் ப்ராக்கோலி, முட்டைக்கோஸ் வகையைச் சேர்ந்த ஒரு காய்கறியாகும்.

Broccoli Benefits for Health:
உலகிலேயே அதிகமான சத்துள்ள காய்கறிகளில் ஒன்றாக ப்ராக்கோலி கருதப்படுகிறது.
அதேபோல் அது நமக்கு அளிக்கும் நன்மைகளும் மிகவும் அதிகமாகும்.
ஒரு ஆரோக்கியமான டயட்டுக்குத் தேவையான காய்கறி எது என்று கேட்டால், சந்தேகமே இல்லாமல் ப்ராக்கோலியைச் சுட்டிக் காட்டலாம்.
எப்படி நம் உடல் ஆரோக்கியத்திற்கு ப்ராக்கோலி நன்மை தருகிறது?
ப்ராக்கோலியில் உள்ள எளிதில் கரையும் நார்ச்சத்துப் பொருள்கள், நம் உடலில் கொலஸ்ட்ரால்களைக் எளிதில் குறைக்க உதவுகின்றன.

ப்ராக்கோலியில் உயிர் வளியேற்ற எதிர்ப் பொருள்கள் நிறைந்து காணப்படுகின்றன.
ஃப்ளேவோனாய்டுகள், கரோட்டீனாய்டுகள், லூட்டின், பீட்டா-கரோட்டீன் மற்றும் ஸியாஸாந்த்தின் ஆகிய உயிர் வளியேற்ற பொருட்கள் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
நம் வயிற்றில் உள்ள செரிமானப் பாதைகளை நன்றாகச் சுத்தப்படுத்துவதில் ப்ராக்கோலி பெரும் பங்கு வகிக்கிறது.
எலும்புகள் வலுவாகும் பெரும்பாலான காய்கறிகளில் கால்சியம் சத்து இருக்காது. அல்லது குறைவாக இருக்கும்.
ஆனால் ப்ராக்கோலியில் கால்சியம் சத்து அதிகம் காணப்படுகிறது.
ப்ராக்கோலியில் உள்ள மினரல்கள், உயிர் வளியேற்ற எதிர்ப் பொருள்கள் ஆகியவை புற்றுநோயை விரட்டி அடிக்கும் தன்மை வாய்ந்தவையாகும்.
இதில் உள்ள நார்ச்சத்து சர்க்கரை நோயை சீராக்கும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராகவும், கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது.
மன நலத்தை அதிகரிக்க ப்ராக்கோலியில் உள்ள வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஆகியவை உதவுகின்றன.

ப்ராக்கோலி ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, புத்திசாலித்தனமாக விளங்கவும் உதவுகின்றன.
ப்ராக்கோலி பலவிதமான எரிச்சல்களையும், அலர்ஜிகளையும் போக்குவதற்கு மிகவும் பயன்படுகிறது.
இதில் இருக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலம், கேம்ப்ஃபெரால் ஆகியவை தான் அலர்ஜிக்கு எதிராக வேலை செய்கின்றன.
ப்ராக்கோலியில் காணப்படும் குளூக்கோராஃபானின், பாதிக்கப்பட்ட சருமங்களுக்குப் பகைவனாக உள்ளது.
ப்ராக்கோலியை சாப்பிடுவதால் சரும நோய்கள் விலகி தோல் பளபளப்பாகும்.
பொட்டாசியமும், மக்னீசியமும் ப்ராக்கோலியில் நிறைந்து காணப்படுகின்றன.
Also Read: Immunity Boosting Food in Tamil : உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்கும் தேநீர்..!
இவை மத்திய நரம்பு மண்டலம் ஆரோக்கியமாக இருக்க பெரிதும் உதவுகின்றன.