brainchip: மூளையை கட்டுப்படுத்தும் ‘சிப்’ஆபத்தா? வளர்ச்சியா?
brainchip: மூளையை கட்டுப்படுத்தும் ‘சிப்’ஆபத்தா? வளர்ச்சியா?
அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க் என்பவர், பல புதுமையான தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வதில் ஆர்வம் மிகுதியாக உள்ளவர்.
இவர் விண்வெளிக்கு சுற்றுலா பயணம், தானாக இயங்கும் கார் என பல புதுமையான கண்டுபிடிப்புகளை தொடர்ந்து அறிவித்து வருகிறார்.
Brainchip
இன்றைய காலக்கட்டத்தில் நமது மூளைகளோடு தொழில்நுட்பத்தை இணைக்க பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன.
இதன் தொடர்ச்சியாக எலான் மஸ்க் கடந்த 2017ல், மனித முளையினை கம்ப்யூட்டர் சிப் வைத்து கட்டுப்படுத்தும் ஆராய்ச்சியினை மேற்கொள்ள தொடங்கினார் .
இதன் காரணமாக, மனித மூளையை இயந்திரங்களுடன் இணைக்கும் தொழில்நுட்பத்தை ஆராய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள நியூராலிங்க் என்ற நிறுவனத்தில் மிகப் பெரிய முதலீட்டை செய்துள்ளார்.
சிப்பின் செயல்முறைகள் :
இந்த தொழில்நுட்பம் வாயிலாக, மனித மூளையில் ஒரு சிறிய சிப் பொருத்தப்பட்டு அதை கம்ப்யூட்டர், மொபைல் போன் போன்ற சாதனங்களுடன் இணைக்கலாம்.
இந்த சாதனங்களை கையால் தொடாமலேயே நினைவுகள் வாயிலாக இயக்க முடியும்.
மேலும், மனித மூளை நினைப்பதை இந்த சாதனங்களில் பதிவு செய்ய முடியும்.
மூளையில் ஏற்படும் பாதிப்புகளை இந்த சிப் உதவியால் சரி செய்ய முடியும் என கூறப்படுகிறது.
முதலில் இந்த நிறுவனம், பன்றிகள் மற்றும் குரங்குகள் போன்ற விலங்குளிடம் இருந்து தங்கள் பரிசோதனையை துவங்கினர்.
தற்போது அதே அமைப்பு மனிதர்கள் மூளையில் சிப்களை பொருத்துவதற்கான ஆராய்ச்சிகளை துவக்க திட்டமிட்டுள்ளது.
இதற்காக மருத்துவ நிபுணர்களை பணியில் அமர்த்த இந்த நிறுவனம் விளம்பரம் செய்துள்ளது. விரைவில் அனுமதி பெற்று மருத்துவப் பரிசோதனைகள் துவங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூளையினை கட்டுப்படுத்தும் கணினி :
கம்ப்யூட்டர் மற்றும் மூளை சம்பந்தப்பட்ட இது பெரும்பாலும் மாற்றுத்திறனாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கின்றது.
பிரெஞ்சு ஸ்டார்ட் அப்பான, நெக்ஸ்ட்மைட், நமது எண்ணங்களை கம்ப்யூட்டரால் கட்டுப்படுத்தும் ஒரு ஹெட்செட்டை உருவாக்கியிருக்கிறார்கள்.
இது மனிதர்களின் தலையின் பின்பகுதியில் வைக்கப்படும் ஒரு ஈ.ஈ.ஜி.சென்சார்.
இக்கருவியானது நமது கண்பார்வைக்கான மூளைப்பகுதியில் உள்ள மின் அதிர்வுகளை கணக்கிடவும், நாம் எதைப் பார்க்கிறோம் என்பதை கண்டறியவும் பயன்படுகிறது.
விளைவுகள் :
இத்தகைய தொழில்நுட்பத்தில் சில அற்புதமான பயன்கள் இருந்தாலும், அதே சமயம் இருண்ட பக்கம் ஒன்றும் இருக்கிறது.
மூளையின் செயல்பாடுகளை கணக்கிடுவதற்கு பதிலாக மூளையை கட்டுப்படுத்த முயற்சி செய்தால் அது விளைவாகும்.
ஒருவரின் எண்ணங்களைப் படித்து, நிஜம் எது என்ற அவரது புரிதலை மாற்றி அவரை நாம் கட்டுப்படுத்தலாம் என்பது ஆபத்தானது.
ஒரு கேள்வி கேட்கும்போது மூளைக்குள் விரியும் காட்சியை வைத்தே அவர் சிந்திப்பதை நாம் கண்டுபிடிக்கலாம்.
இத்தகைய செய்திகளை தொழிநுட்பங்கள் மூலம் கண்டறிவதால் நமது மனம் சார்ந்த தரவுகளும் அவர்களுக்குள் போய்விடும்.
இது ஆபத்தானது என்று உரைக்கிறார் கொலம்பியா பல்கலைக்கழகத்தின், நியூரோடெக்னாலஜி மைய இயக்குநர் ரஃபேல் யூஸ்டே.
மேலும் அவர்,“ இதுபோன்ற தொழில்நுட்பங்கள் அதீத சக்தி வாய்ந்தவை. மனித இனத்தில் முதல்முறையாக மூளைக்குள் செல்லக்கூடிய ஒரு தொழில்நுட்பம் வந்திருக்கிறது“ என்கிறார்.
Also Read: JIO 5G plans in India: இந்தியா முழுக்க 1000 நகரங்களில் JIO 5G சேவை – விரைவில் அறிமுகம்!
வளரும் தொழில்நுட்பம் மூலம் நம் மூளைகளை கட்டுப்படுத்தும் ஆபத்து உள்ளது, இருப்பினும் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்கிறார்கள் நிபுணர்கள்.