Tamil Technology Newsஅறிவியல்செய்திகள்

Brain Anatomy: 60 வயதிற்குப் பிறகும் மனித மூளையின் செயலாற்றும் வேகம் குறையாது! ஆய்வு கூறும் செய்தி..!

Brain Anatomy: 60 வயதிற்குப் பிறகும் மனித மூளையின் செயலாற்றும் வேகம் குறையாது! ஆய்வு கூறும் செய்தி..!

நம்முடைய  உடலின் மைய நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதிதான் மூளை.

how your brain changes with age

How your brain changes with age:

இது தகவல்களை பெறுவதற்கும் அனுப்புவதற்கும் அதிகத்  திறனைக் கொண்டுள்ளது.

நம்முடைய 20ஆம்  வயதில் மனித மூளையின் யோசிக்கும் திறன் குறைந்து விடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால், இந்த புதிய ஆய்வின் மூலம், 20 வயது முதல் மக்கள் முடிவெடுப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்வதற்கு காரணம்  தகவல் செயலாக்கத்தின் வேகம் குறைவதால் அல்ல என்று தெரியவருகிறது.

அதுபோல, 60 வயது வரை தகவல்களைச் செயலாக்கும் நமது திறன்  குறையாது எனவும் விளக்குகிறது.

ஜெர்மனியில் உள்ள ஹைடெல்பெர்க் பல்கலைக்கழகத்தில் Mischa von Krause மற்றும் அவரது சக ஊழியர்கள் (colleagues) 10 முதல் 80 வயதுக்குட்பட்ட 1.2 மில்லியன் மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களை ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில் மூளை சோதனைக்கான எதிர்வினை நேரம் அளவிடப்பட்டது.

மக்களின் மன வேகம்:

இந்த ஆய்வில் உள்ளவர்களின் மூளையின் திறனை சோதித்து பார்ப்பதற்கு, அவர்களுக்கு திரையில் வரிசையாக சொற்கள் மற்றும் படங்களினை வரிசையாக காண்பித்து அவற்றை வகைப்படுத்த முடிகிறதா என்பதை ஆராய்ந்தனர்.

உதாரணமாக, முகங்களை வெள்ளை அல்லது கருப்பு என லேபிளிடவும்(labeling) அல்லது இரண்டு பொத்தான்களில் ஒன்றை அழுத்துவதன் மூலம் “மகிழ்ச்சி” அல்லது “வேதனை” போன்ற வார்த்தைகளை நல்லது அல்லது கெட்டது என வகைப்படுத்த கூறினர்.

இதன் அடிப்படையில், 20 வயதிற்குப் பிறகுள்ள  மக்கள் பதிலளிக்கும் நேரம் மெதுவாக இருந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

இதற்கு காரணம், 20 வயதிலிருந்து ஒருவர் ஒரு முடிவு எடுக்கும் போது அதன் முன் அதிக உறுதியை விரும்புவார்கள்.

மேலும், காட்சித் தகவல்கள்  கண்களிலிருந்து மூளைக்குச் செல்ல அதிக நேரம் எடுத்துக்கொள்வதாலும், உடல் ரீதியாக பொத்தானை அழுத்துவதற்கு அதிக நேரம் எடுப்பதாலும், அவர்கள் மெதுவாக பதில் அளிக்கலாம் என விளக்கம் அளிக்கின்றனர் ஆராய்ச்சி குழுவினர்.

மக்களின் மன வேகம் அவர்களின் 20 வயதிலிருந்தது அதிகரிக்கிறது, மேலும் 60 வயது வரை அதிகமாக இருக்கும் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

வயது அதிகரிப்புடன் மக்கள் தங்கள் முடிவுகளில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள் – அவர்கள் தவறுகளைத் தவிர்க்க முயற்சி செய்கிறார்கள்.

Also Read: Why Sleeping is Not Coming: தூக்கத்தை இழப்பதால் ஏற்படும் உடல்நலப் பிரச்சனைகள்..!

இதுவே அவர்கள் குறைந்து செயலாற்றுவதற்கு காரணம் ஆகும்.

எனவே மனிதனின் மூளைத்திறன் ஆனது மாறுவதற்கு வயது காரணம் இல்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.