இயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Black Gram: உளுத்தம் பருப்பினால் உடலில் ஏற்படும் அற்புத மாற்றங்கள்..!

Black Gram: உளுத்தம் பருப்பினால் உடலில் ஏற்படும் அற்புத மாற்றங்கள்..!

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் தானிய வகைகளில் உளுந்து முக்கிய இடத்தில் உள்ளது.

Black Gram

Ulunthu:

நம் உடல் உறுப்புகளை புதுப்பித்து உளுந்துபோகாமல், ஆற்றல் தருவதால் தா‌ன் இதற்கு உளுந்து என பெயர் வந்தது.

தென் இந்திய உணவுகளில் குறிப்பாக நம்ம ஊர் தோசை, இட்லி, மெது வடை போன்ற உணவுகளின் முக்கிய மூலப்பொருள் உளுந்து தான்.

உளுந்து ஏராளமான கனிமங்களையும், ஊட்டச்சத்துகளையும் கொண்டுள்ளது. உளுந்தில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது.

இந்த நார்ச்சத்துக்கள் நீங்கள் உண்ணும் உணவினை நன்கு செரிக்கச் செய்வதுடன் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களையும் உங்கள் உடல் உறிஞ்ச உதவுகின்றன.

மேலும் நார்ச்சத்தானது வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வாயுத்தொல்லை உள்ளிட்ட செரிமான பிரச்சினைகள் ஏற்படாமல் பாதுகாக்கின்றது.

உளுந்தில் பொட்டாசியம் மிக அதிகமாக உள்ளது. 200 கிராம் உளுந்தில் ஏறத்தாழ 1500 மி.கி பொட்டாசியம் சத்து உள்ளது.

உப்பு உட்கொள்வதால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளை நீக்குவதன் மூலம் ரத்த அழுத்தத்தைக் குறைக்க பொட்டாசியம் சத்து உதவுகிறது.

உளுத்தம் பருப்பில் தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ளன. அவை அனைத்து விதமான தோல் எரிச்சலையும் குறைக்க உதவும்.

அதிக ஆக்ஸிஜனேற்ற ரத்தத்தை உங்கள் உடலுக்கு கொண்டுவருகிறது. மேலும் இது பளிச் என்ற ஒளிரும் சருமத்தை அளிக்கிறது.

உளுந்து உங்கள் உலர்ந்த மற்றும் உடையக்கூடிய தலை முடியைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

உளுத்தம் பருப்பில் அதிக அளவு நார்ச்சத்து, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உள்ளன,

அவை நமது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனளிக்கின்றன. எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

Black Gram:

எலும்பு ஆரோக்கியத்திற்கு மெக்னீசியம் மற்றும் கால்சியம் இன்றியமையாதவை.

100 கிராம் உளுந்தில் 267 மி.கி மெக்னீசியம் உள்ளது. இது தினசரி பரிந்துரைக்கப்பட்ட மதிப்பில் 75% ஆகும்.

எலும்பு முறிவுகளை தடுக்க மெக்னீசியம் உதவக்கூடும் என ஆய்வுகள் கண்டறிந்துள்ளனர்.

மேலும், உளுத்தம் பருப்பில் உங்கள் எலும்பு ஆரோக்கியத்திற்கு அவசியமான கால்சியம் சத்தும் நிறைந்துள்ளது.

உளுத்தம் பருப்பில் அதிக அளவு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளதால் இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகின்றன.

உளுத்தம் பருப்பின் அரைத்த கலவையை உங்கள் நிவாரணத்திற்காக நீங்கள் வலிக்கும் மூட்டுகள் மற்றும் தசைகளுக்கு மேற்பூச்சாகப் பயன்படுத்தலாம்.

கடுமையான மற்றும் கொடிய நோயின் பாதிப்பிலிருந்து விடுபட்டவர்கள் உளுந்தை களியாகவோ, கஞ்சியாகவோ அல்லது அரிசி சேர்த்து அரைத்து வேகவைத்து உணவாக சாப்பிட்டு வந்தால் உடல் தேகம் வலுப்பெறும்.

Also Read: Can we eat paneer daily? பன்னீரை எப்படி நாம் சரியான முறையில் சாப்பிடலாம்..?

இதுபோன்ற எண்ணற்ற பலன்கள் இந்த உளுத்தம் பருப்பில் இருப்பதால் இது நிச்சயம் உங்களுக்கு ஆரோக்கியமான உடலை பெற உதவும்.