இயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Best Medicine For Headache: தீராத தலைவலியை தீர்க்க உதவும் அருமருந்து..!

Best medicine for headache: தீராத தலைவலியை தீர்க்க உதவும் அருமருந்து..!

தீராத தலைவலியை தீர்க்க உதவும் கரிசலாங்கண்ணிக் கீரை சோம்பு கசாயத்தை பயன்படுத்தி பயனடையுங்கள்.

Best medicine for headache-newstamilonline

Best Medicine For Headache:

தேவையான பொருட்கள்:

கரிசலாங்கண்ணிக் கீரை – ஒரு கைப்பிடி

சோம்பு – ஒரு ஸ்பூன்

மிளகு- 10

மஞ்சள் தூள்- சிறிதளவு

செய்முறை:

முதலில் கரிசலாங்கண்ணிக் கீரையை நன்றாக கழுவி ஆய்ந்து கொள்ளவும். மிளகை தூள் செய்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் 500 மி.லி அளவு தண்ணீர் ஊற்றி அதில் கீரை , சோம்பு மிளகுத் தூள் மற்றும் மஞ்சள் தூளையும் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். நன்றாக கொதித்து நீரை 150 மி.லி அளவாகச் சுண்ட வைத்து வடிகட்டி வைத்துக் கொண்டு குடிக்கவும்.

பயன்கள்:

இந்தக் கசாயத்தை தலைவலியினால் துன்பப்படும்பொழுது தயார் செய்து கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வரவும்.

தொடர்ந்து தலைவலியினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தக் கசாயத்தை தினமும் ஒருவேளை வெறும் வயிற்றில் 48 நாட்களாவது குடித்து வந்தால் தீராத வலைவலியும் தீரும்.

இரவு படுக்கப் போகும் முன்:

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

கரிசலாங்கண்ணிக் கீரையின் சில பயன்கள்:

கரிசலாங்கண்ணி கீரை ஒரு காயகற்ப மூலிகை. தினமும் இதை உணவில் பயன்படுத்துவது மிகவும் நல்லது.

கரிசலாங்கண்ணி கீரை கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகத்தை தூய்மை செய்யும். சூரப்பிகளை செயல்பட தூண்டும். உடலை உறுதிப்படுத்தும்.

இரும்புச்சத்தும் எராளமான தாதுசதுக்களும் இந்த கீரையில் உள்ளன. உடலில் ஏற்படும் நீரிழிவு நோயை கட்டுபடுத்தும். சளி, இருமலை குணமாக்கி உடல் பலத்தை தரும்.

மேலும், அஜீரணம், வயிற்றுவலி, குடல்புண், ரத்தசோகை, பித்தப்பை கற்கள் போன்றவற்றை போக்கும். உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பை கரைக்கும் சக்தியும் இருக்கிறது.

Also Read: Benefits of coriander water: உடலை இரும்பு போல மாற்றும் மல்லி விதை நீர்..!

குறிப்பு:

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *