Best Juice In Summer: சம்மர் வந்துவிட்டதா! சுட்டெரிக்கும் வெயிலை விரட்டியடிக்கும் எளியவகை ஜூஸ்கள்..!

Best Juice In Summer: சம்மர் வந்துவிட்டதா! சுட்டெரிக்கும் வெயிலை விரட்டியடிக்கும் எளியவகை ஜூஸ்கள்..!

சம்மர் வந்தாலே கூடவே வெயிலும் சேர்ந்துவரும். அதுவும் பெரிய நகரங்களில் இருக்கும் மக்கள் வெயிலை சமாளிக்க முடியாமல் ரொம்பவே கஷ்டப்படுராங்க.

Best Juice In Summer

Also Read: High Fiber Vegetables: நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவை சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்..!

What type of food we eat in summer season?

வெயிலிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள நாம்,அதிக அளவு நீர்ச்சத்துள்ள உணவுகளை நாம் சாப்பிட்டாலே போதும்.

இப்போது வெயிலின் வாட்டம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக தெரிகிறது.

அக்னி நட்சத்திரமும் தொடங்கிவிட்டது, இதன் காரணங்களால்,நம் உடலை குளிர்விக்க ஜூஸ் வகைகள் நமக்கு அதிகமாகவே தேவைப்படுகிறது.

அப்படி உடலுக்கு புத்துணர்ச்சி தரும் சில ஜூஸ் வகையை பார்க்கலாம் வாருங்கள்.

எலுமிச்சை(Lemon)ஜூஸ்:

பொதுவாக எலுமிச்சம் பழம் நம் உடலுக்கு அதிக புத்துணர்ச்சியை தரக்கூடியது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே.

நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க இதில் உள்ள விட்டமின்c உதவுகிறது.

அதனால் , இந்த லெமன் ஜூஸ் கடும் வெயிலிருந்து நம்மை பாதுகாக்க பெரும் உதவியாக இருக்கும். மேலும், இது எல்லோருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய பழமாகும்.

தர்பூசணி(Watermelon)ஜூஸ்:

வெயில் காலங்களில் மிகவும் மலிவாகக் கிடைக்கக்கூடிய பழங்களில் தர்பூசணியும் ஒன்று. இந்த பழத்தில் நம் உடலுக்கு தேவையான ஏராளமான நீர்ச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த ஜூஸை குடிப்பது ரொம்ப நல்லது.

ப்ளூபெர்ரி(Blueberry) ஜூஸ்:

ப்ளூபெர்ரி நம் ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.

இப்பழத்தில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள்(antioxidants) இருக்கிறது.

நீரிழிவு மற்றும் இதய நோயாளிகளுக்கு இந்தப் பழம் பயனுள்ளதாக அமைகிறது.

Also Read: Goji Berries Benefits: பார்வை திறனை அதிகரிக்கும் கோஜி பெர்ரி..!

வெள்ளரி(Cucumber)ஜூஸ்:

வெள்ளரி ஒரு பழ வகையினை சார்ந்தது என்பது நம்மில் பலர் அறியாத ஓன்று. இதில் நமக்கு தேவையான ஏராளமான நீர்ச்சத்துக்களும் அடங்குள்ளது.

வெள்ளரி, சாப்பிடுவதால் நம் இளமை பருவம் நீண்ட நாள் இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.

வெயில் காலத்தில் தினசரி உணவில் தயிருடன் வெள்ளரியும் சேர்த்துக் கொள்வது உடலுக்கு குளிர் தன்மையை கொண்டு வரும்.

Best Juice In Summer:

க்ரீன் டீ(Green Tea) :

வெயில் நேரத்தில் டீ, காபி போன்றவற்றை அருந்துவதற்கு பதிலாக க்ரீன் டீயை எடுத்துக் கொள்ளலாம்.

இந்த க்ரீன் டீ நம் உடலில் உள்ள செல்களுக்கு ஓர் பாதுகாப்பாக இருக்க உதவுகிறது.

மேலும், புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும் குணம் இதற்கு உண்டு.

ஒரு நாளைக்கு இரண்டு முறை க்ரீன் டீ எடுத்துக் கொள்வது நல்லது.

பழச் சாறின் நன்மைகளைப் பற்றி பார்த்து வந்துவிட்டோம்.இனி காய்கறியிலிருந்து உருவாக்கும் சாறின் நன்மைகளை காண்போம்.

பழங்களை வைத்து மட்டுமல்ல, வீட்டில் சமையலுக்கு தேவைப்படும் காய்கறிகளை வைத்தே கோடைகாலத்திற்கு சூட்டைத்தணிக்கும் பலவிதமான ஜூஸ்கள் செய்யலாம்.

பூசணி(Pumpkin) ஜூஸ்:

பூசணிக்காய் பலருக்கு மிகவும் விருப்பமான காய்கறியாக உள்ளது,
பூசணிக்காயை வைத்து நாம் சமைத்து தான் சாப்பிட்டிருக்கிறோம்.

ஆனால் இந்த பூசணிக்காயில் நம் உடலுக்கு தேவையான நன்மைகள் பல உள்ளன. அதை எண்ணெயில் போட்டு பொரித்து சாப்பிடுவதை விட அரைத்து ஜூஸாக குடிப்பது பல விதங்களில் நன்மை விளைவிக்கும்.

பூசணிக்காயில் (விட்டமின் டி, vitamin b1, vitamin B2, vitamin b6, vitamin c vitamin e), விட்டமின்கள் இருக்கின்றன.

அதுமட்டுமல்லாமல் பூசணிக்காயில், காப்பர் மெக்னீசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் போன்ற மினரல்களும் இதில் அடங்கியிருக்கிறது.

பீட்ரூட்(Beetroot) ஜூஸ்:

பீட்ரூட் மிகுந்த அடர்த்தியான நிறம் கொண்டிருக்கும். இதில் விட்டமின் b9 பொட்டாசியம், மெக்னீசியம் இரும்புச்சத்து வைட்டமின் சி போன்றவை நிறைந்து உள்ளது.

பீட்ரூட் உண்பதால் இரத்த அழுத்த குறைவு வருவதை தடுக்கலாம்.

பீட்ரூட்டை பச்சையாக சாப்பிடுவது சிலருக்கு பிடிக்காது. அதனால் பீட்ரூட்டை அரைத்து ஜூஸாக குடிக்கும் போது அதில் இருக்கக்கூடிய அனைத்து நன்மைகளும் நேரடியாக நம் உடலை அடைகிறது.

கேரட்(Carrot)ஜூஸ்:

இது அனைத்து நாட்களிலும் கிடைக்கக்கூடிய ஒரு எளிமையான காய்கறி.

கேரட்டில், கரோட்டின், நார்ச்சத்து, விட்டமின் கே 1, பொட்டாசியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருக்கிறது.

இயற்கையாகவே இனிப்பு தரக்கூடிய சுவையும் உள்ளது. எனவே கேரட்டில் ஜூஸ் செய்யும் போது அதில் நாம் அதிகமாக சர்க்கரை சேர்க்க வேண்டிய அவசியம் வராது.

கேரட் வைத்து ஜூஸ், இனிப்பு, சூப் போன்ற வித விதமான சுவையான உணவுப் பொருட்களை தயாரிக்கலாம்.

நம் கண் பார்வைத்திறனுக்கு மிகவும் நன்மை விளைவிக்கும் ஒருவகை காய்கறி கேரட் ஆகும். மேலும்,கொலஸ்ட்ரால் உடல் எடை குறைத்தல் ஜீரண சக்தி அதிகரித்தல் என்று அனைத்துவகையிலும் பயனுள்ளதாகவே கேரட் அமைகிறது.

கேரட்டை பச்சையாக சாப்பிடுவது ரொம்ப நல்லது.

Also Read: Radish Benefits for Health: இதயத்தின் நண்பன் – சிவப்பு முள்ளங்கி சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள்..!

எனவே,கோடைக்காலத்தில் ஆரோக்கியமான குளிர்ந்த உணவுகளை அருந்தி உடல்சூட்டினை தனியுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *