News Tamil OnlineTamil Technology NewsToday Tamil News Onlineஇயற்கையோடு வாழ்வோம்கீரைகள்செய்திகள்

Best Food For Skin : சரும வியாதிகள் போக்க சிறந்ததா இந்த பரட்டைக் கீரை..!

Best Food For Skin : சரும வியாதிகள் போக்க சிறந்ததா இந்த பரட்டைக் கீரை..!

பரட்டைக் கீரையானது கீரைகளின் ராணி என்று அழைக்கப் படுகிறது. இந்த கீரை ஆங்கிலத்தில் ‘கேல்’ என்று கூறப்படுகிறது.

Best Food For Skin

Best Food For Skin :

இந்த கீரையின் தோற்றம் பார்ப்பதற்கு தலைவிரி கோலம் போன்று இருப்பதால் இது பரட்டை கீரை என்ற பெயரினைப் பெற்றுள்ளது.

பரட்டைக் கீரையில் குறைந்த அளவு கலோரி, அதிக நார்ச்சத்து,தேவையான கொழுப்பு சத்து போன்றவை நிறைந்து காணப்படுகின்றன.

மேலும் இதுபோன்ற எண்ணற்ற சத்துக்கள் இந்த பரட்டை கீரையில் அடங்கியுள்ளன. பசலைக்கீரையை விட அதிக அளவு விட்டமின் C சத்து இந்த பரட்டைக் கீரையில் உள்ளது.

பாலில் இருப்பதைவிட அதிக அளவு கால்சியம் இந்த பரட்டைக் கீரையில் நிறைந்து உள்ளது. இந்த கீரை சுவையில் முருங்கை இலையின் சுவையை போன்றே இருக்கும்.

சரும வியாதிகள், காயங்கள் நீங்க:

நமது உடலின் மேற்பகுதியை காக்கும் வகையில் தோல் அமைகின்றது, இந்த தோல் பல வகையான தொற்று நோய்களை பாதிக்கும் வகையில் உள்ளது. மேலும் அதன் மேல், காயங்களும் ஏற்படுகின்றன.

இந்த தோல் நோய்களில் இருந்து விடுபடுவதற்கு, பரட்டைக் கீரையை எடுத்து, கழுவி.

பின் அதை நன்றாக அரைத்து, ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் அரைத்து வைத்திருக்கும் பரட்டை கீரையை சேர்த்து, கூடவே சிறிது மஞ்சள் பொடி சேர்த்து தைலப்பதத்தில் நன்கு காய்ச்சவும்.

காய்ச்சிய அந்த தைலத்தை பயன்படுத்துவதால் தோலின் மேல் ஏற்பட்ட புண்கள் ஆறும்.தோல் நோய்கள் நீங்கிவிடும்.

வெட்டுக்காயங்கள் ஆறி அடையாளம் தெரியாமல் மறையும்.

மேலும், நம் உடலின் பாதத்தில் முள், கண்ணாடி துண்டு போன்றவை தெரியாமல் குத்தினால் காயம் ஏற்படும்.

இதற்கு ஓர் சிறந்த மருந்தாக இந்த பரட்டைக் கீரையை அரைத்து காயம் உள்ள இடத்தில இட்டு கட்டி வைத்தால் போதும், ஒன்றிரண்டு நாட்களில் குத்திய முள், கண்ணாடி துண்டுகள் போன்றவை வெளியேறிவிடும்.

Food Good For Heart:

இதயம்:

இதயம் ஆனது நம் உடலின் அனைத்து உறுப்புகளுக்கு ரத்தத்தை பாய்ச்சும் முக்கிய வேலையினை செய்து வருகிறது.

ஆனால் ஒரு சிலருக்கு இதயத்தில் அடைப்பு ஏற்பட்டு இதய பாதிப்பு, இதயம் செயலிழந்து போதல் போன்ற ஆபத்தான பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

இந்த பிரச்சனைகளுக்கு பரட்டை கீரையை தினந்தோறும் உணவில் சேர்த்து உண்டு வந்தால் இதய தசைகள் நன்கு வலுப்பெற்று, இதயம் சம்பந்தமான நோய்கள் பாதிக்காமல் இருக்கும்.

உடல் எடை குறைப்பு:

கட்டுப்பாடில்லாமல் எந்த வகையான உணவுகளையும் உண்பது, சரியான உடற்பயிற்சி மேற்கொள்ளாமல் இருப்பது போன்றவை உடல் பருமன் ஏற்படுவதற்கு அதிகம் காரணமாக இருக்கிறது.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் அடிக்கடி பரட்டைக் கீரையை பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் விரைவாக உடல் எடையை குறைய வாய்ப்புள்ளது.

நோய் எதிர்ப்பு:

பரட்டைக் கீரைக்கு நோய்எதிர்ப்பு சக்தியை கூட்டும் மருத்துவ குணம் உள்ளது.

இந்த கீரைகளின் இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பன்மடங்கு அதிகரிக்கும்.

தொற்று நோய்கள் சுலபத்தில் உடலை தாக்காதவாறு இந்தக் கீரை
சிறந்த கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.

வயிற்று புண்கள்:

காலை உணவுகளை சாப்பிடாமல் தவிர்ப்பதாலும், நேரங்கடந்து சாப்பிடுவதாலும், அதிக காரம் உள்ள உணவுகளை உண்பதாலும் வயிற்றின் குடல் பகுதிகளில் புண்கள் ஏற்படுகிறது.

இதனால் உணவை செரிமானம் செய்வதில் பிரச்சனை ஏற்படுகிறது. பரட்டைக் கீரையை கூட்டு,பொரியல் போன்ற பக்குவத்தில் சாப்பிடுவதால் குடல் புண்கள் நீங்குகிறது.

கடுமையான மலக்கட்டை இளக செய்து, மலச்சிக்கல் பிரச்சனையையும் தீர்க்கிறது.

சிறுநீரகம்:

அதிகம் உப்புத்தன்மை கொண்ட உணவுகளை சாப்பிடுவதாலும் சிலருக்கு சிறுநீரகங்களில் உப்புகள் அதிகம் சேர்ந்து கற்கள் உருவாகும் ஆபத்து ஏற்படுகிறது.

பரட்டைக் கீரையை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகங்களில் கற்கள் உருவாகியிருந்தால் அது கரையும்.

சிறுநீரை நன்கு பெருகி உடலில் சேர்ந்திருக்கும் நச்சுகளை எல்லாம் சிறுநீர் வழியாக வெளியேற்றும்.

எலும்புகள்:

நமது உடலில் எலும்புகள் பலமாக இருக்க வேண்டியது அவசியம். ஆனால், வயதாக ஆக எலும்புகளின் உறுதி தன்மை குறைந்து கொண்டே வரும்.

இதற்கு ஓர் சிறந்த தீர்வாக இந்த பரட்டை கீரையில் உள்ள சத்துக்கள் உள்ளன. இவை எலும்புகள் மற்றும் மூட்டுகளை வலுவடையச் செய்கின்றன.

வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை பரட்டை கீரையை பக்குவம் செய்து சாப்பிட்டால் எலும்புகள், பற்கள்,மூட்டுகள் போன்றவை வலுவடையும்.

How To Eat Kale ?

எவ்வகையில் எடுத்துக் கொள்ளலாம்:

பரட்டைக் கீரையில் இருந்து சாறு எடுத்து அவற்றில் சுக்கை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி,தேனில் ஒரு கிராம் அளவு குழைத்துச் சாப்பிட்டு வந்தால் சளி, இருமல் குணமாகும்.

பரட்டைக் கீரையுடன் பூண்டு, மிளகு, ஒமம் ஆகியவற்றைச் ஒன்றாக சேர்த்து அவித்துச் சாப்பிட்டு வந்தால் வாயுக் கோளாறுகள், பெருவயிறு பிரச்சனைக் குணமாகும்.

Also Read : Best Way To Lose Weight: ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைப்பது எப்படி?

பரட்டைக் கீரை, வாதநாராயணன் கீரை, முடக்கத்தான் கீரை இவை மூன்றையும் சம அளவு எடுத்து, அதிலிருந்து சாறு பிரித்து, அதனை நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சி தைலமாக்கி வலிகள் இருக்கும் இடத்தில் தேய்த்துவந்தால் கை, கால், இடுப்பு, மூட்டு வலிகள் குணமாகும்.

பரட்டைக் கீரைச் சாறுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தைலமாகக் காய்ச்சி பயன்படுத்தி வந்தால் தோல் நோய்களான படை, சொறி, சிரங்கு போன்றவை குணமாகும்.

இத்தகைய பல அற்புத பயன்களை கொண்ட இந்த பரட்டைக் கீரையை நீங்களும் உண்டு பலன் பெருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *