இயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Sea Food: இளமையான தோற்றம் வேண்டுமா? கடல் உணவுகளே சிறந்த மருந்து..!

Sea Food: இளமையான தோற்றம் வேண்டுமா? கடல் உணவுகளே சிறந்த மருந்து..!

உலகத்தில் அனைத்து உயிரினங்களுக்கும் அடிப்படைத் தேவை உணவு. உணவு இல்லையென்றால் உயிர் வாழமுடியாது. அவ் உணவுகளிலும் அசைவம், சைவம் என்று இரு பிரிவுகள் உள்ளன.

Benefits of sea food - newstamilonline

Sea Food:

இவ்வுலகில் சைவ உணவை விட அசைவ உணவை விரும்பி உண்பவர்கள் தான் அதிகமாக உள்ளனர் .

அசைவ உணவில் கடல் வாழ் உயிரினங்கள் மிகவும் ஆரோக்கியமானது, நிறைய சத்துகள் கொண்டது என்று கூறப்படுகிறது.

மீன், இறால், நண்டு, கணவாய், மட்டி என பலவிதமான கடல் வாழ் உயிரினங்களை மனிதர்கள் விரும்பி உண்கின்றனர். அதுமட்டுமல்ல, கடல் புல் போன்ற கடல் தாவர இனங்களையும் தன் உணவாக எடுத்துகொள்கின்றனர்.

பொதுவாக கடல் உணவு மற்றைய அசைவ உணவுகளை விடச் சிறந்ததாகவும், கொழுப்புச் சத்து குறைவானதாகவும் உள்ளது.

பெரும்பாலும் மனிதர்கள் உடலில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் அயோடின் குறைபாடு போன்றவை அதிகமாக காணப்படுகிறது.

இந்த இரண்டு சத்துக்களும் கடல் உணவில் அதிகம் உள்ளது. எனவே தான், மருத்துவர்கள் கூட மீன், இறால் போன்ற உணவுகளை பரிந்துரைக்கின்றனர்.

சால்மன் (Salmon) என்பது ஒரு வகை எண்ணெய் மீன் ஆகும், வாய்க்கு ருசியான சால்மனில் புரதம் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் அதிக அளவு காணப்படுகிறது.

இதில் வைட்டமின் டி சத்தும் உள்ளது. ஊட்டச்சத்துக்கள் உள்ள உணவுகள் பட்டியலில் முதலிடத்தை பிடிக்கிறது சால்மன்.

எனவே இத்தகைய மீனை சாப்பிடுவதன் மூலம் நம் உடலுக்கு தேவையான ஒமேகா கிடைக்கிறது. மேலும் நம் இந்தியா மீன் வளர்ப்பில் இரண்டாவது மிகப் பெரிய நாடாகத் திகழ்கிறது.

மத்தி மீன் பார்ப்பதற்கு சிறிதாக இருக்கும். உடலுக்குத் தேவையான பெரும்பாலான ஊட்டச்சத்துக்கள் இருப்பதால், மத்தி மீன், மிகவும் பிரபலமான கடல் உணவு என்ற பெயரைப் பெறுகிறது.

Shellfish வகை கடல் உயிரினங்கள் ஊட்டச்சத்து நிறைந்தவை என்பதோடு, அதன் இறைச்சி அடர்த்தியாக இருப்பதால், மற்ற இறைச்சிகளைப் போலவே இருக்கும்.

இறால் என்பது நண்டுகள் தொடர்பான ஒரு வகை ஓட்டுமீனாகும். இதில் வைட்டமின் பி 12 உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளது. கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவாக இருக்கும், ஆனால் புரதச்சத்து அதிகம் கொண்டது.

சால்மன் போன்ற சுவையான நன்னீர் மீன்களில் ட்ரவுட் மீனும் பிரபலமானது, பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மற்றொரு வகை மீன்.

டுனா மீன் மேற்கத்திய நாடுகளில் மிகவும் பிரபலமானது. புரதச்சத்து அதிகமாக இருக்கும் டுனாவி, கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவாக இருக்கும்.

கடல் உணவுகளே மருந்து!

பொதுவாக, சீன மக்களின் தங்கள் உணவுப் பழக்கத்தில் கடல் உணவுகளே அதிகமாக உண்கின்றனர் .

இதனால் அவர்கள் இந்தியாவிலிருந்து மீன்கள், கடல் காளான்கள், இறால்கள் மற்றும் நண்டு்போன்ற பல கடல் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்கின்றனர்.

இந்தியாவிலிருந்து தற்போது வஞ்சிரம், வெள்ளை வவ்வால் மீன் போன்றவை அதிகமாக ஏற்றுமதியாகின்றன.

ஏற்றுமதியாகும் மீன்கள் மற்றும் இதர உணவுப் பொருட்கள் குளிரூட்டப்பட்ட நிலையிலும், பதப்படுத்தப்பட்ட நிலையிலும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

Also Read: Cycling benefits in weight loss: சைக்கிள் பயிற்சி செய்வதில் இவ்வளவு நன்மைகளா..?

காயவைத்த மீன்கள் (கருவாடுகள்) இலங்கைக்கு அதிகமாக ஏற்றுமதியாகிறது. இலங்கையில் உள்ளவர்கள் காயவைத்த மீன் உணவுகளையே அதிகம் விரும்பியுன்கின்றனர் .

எனவே கடல் உணவுகள் சாப்பிடுவதன் மூலம் நாம் இளமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கலாம்.