Benefits of Jaggery: வெல்லம் கலந்த காபி ‘sugar free’ காபியா!.. நிபுணர்களின் கருத்து என்ன?..
Benefits of Jaggery: வெல்லம் கலந்த காபி ‘sugar free’ காபியா!.. நிபுணர்களின் கருத்து என்ன?..
பழங்காலத்திலிருந்தே, வெல்லம் சமையலறையில் மட்டுமல்ல, ஆயுர்வேத மருந்துகளிலும் பயன்படுத்தப்படும் பொருளாகும்.
வெல்லம் பல இந்திய உணவுகளில் பயன்படுத்தப்படும் ஒரு பாரம்பரிய இயற்கை இனிப்பு ஆகும்.

Benefits of Jaggery:
இத்தகைய வெல்லத்தில் ஃபோலிக் அமிலம்(folic acid), இரும்பு, கால்சியம், செலினியம்(selenium) மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் உள்ளன. இந்த சத்துக்கள் பல நோய்களை உடலில் இருந்து விலக்கி விடுகிறது.
ஆனால் நீரிழிவு நோயாளிகளுக்கு உண்மையில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் நல்லதா என்ற கேள்வி நம்மில் பல பேருக்கு உண்டு.
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை விட வெல்லம் இயற்கையானது என்று ஏன் நினைக்கிறோம்.
இந்தக் கூற்றை ஆராய, வெல்லத்தின் ஊட்டச்சத்து மதிப்பை சர்க்கரையுடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது.
அகமதாபாத் அப்பல்லோ மருத்துவமனையின் ஆலோசகர் டாக்டர் ஷஷிகாந்த் நிகம்(Shashikant Nigam) கூறுவது வெல்லம் என்பது கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருளின் ஒரு வடிவம் என்று விளக்குகிறார். இதில் 65-70 சதவீதம் சுக்ரோஸ் காணப்படுகிறது.
சுக்ரோஸ் என்பது பழங்கள், காய்கறிகள் மற்றும் கொட்டைகள் போன்ற தாவரங்களில் காணப்படும் இயற்கையான சர்க்கரை அளவு ஆகும்.

How to Control Sugar?
அதே சமயம் வெள்ளை சர்க்கரையில் 99.5 சதவீதம் சுக்ரோஸ் காணப்படுகிறது. வெள்ளை சர்க்கரையுடன் ஒப்பிடும்போது வெல்லத்தில் சுக்ரோஸ் அளவு குறைவாக இருப்பதால், அதை உட்கொண்ட பிறகு குளுக்கோஸ் அளவு மெதுவாக அதிகரிக்கிறது என்று டாக்டர். நிகாம் கூறுகிறார்.
இரத்த சர்க்கரை அளவில் வெல்லத்தின் தாக்கம் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை அளவை விட குறைவு தான்.
எனினும் கிளைசெமிக் இன்டெக்ஸ் (glycemic index) எனப்படும் ஒரு முக்கிய காரணி காரணமாக நீரிழிவு நோயாளிகளுக்கு இது அவ்வளவு நல்லது இல்லை.
கிளைசெமிக் இன்டெக்ஸ் என்பது ரத்த ஓட்டத்தில் ஒரு குறிப்பிட்ட உணவிலிருந்து குளுக்கோஸ் வெளியிடப்படும் விகிதத்தை வரையறுப்பது ஆகும்.
வெல்லம் மற்றும் சர்க்கரை :
சர்க்கரையை விட வெல்லத்தில் உள்ள புரதச் சத்து அதிகம். எனினும் நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் உட்கொள்ளலாம் என எந்த ஆய்வும் பரிந்துரைக்கவில்லை.

Advantages of Jaggery:
சத்துக்கள் நிறைந்த வெல்லம்:
பல இந்திய பாரம்பரிய உணவுகளில் வெல்லம் ஒரு முக்கிய பங்காற்றி வருகிறது. கரும்பு உற்பத்தி மற்றும் அதிக ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் வெல்லம் எப்போதும் நம் வீடுகளில் விரும்பப்படுகின்றன.
பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், வைட்டமின் பி12 நிறைந்த வெல்லம் கடைகளில் எளிதாகக் கிடைக்கிறது.
மேலும் வெல்லத்தில் இரும்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் வெல்லத்தை பெண்கள் சாப்பிடுவது அவர்களுக்கு நன்மை தரும். மேலும் இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள இரத்தத்தின் அளவு அதிகரித்து, ஞாபக மறதியை போக்கும்.
சித்த மருத்துவத்தில் சில வியாதிகளுக்கு மருந்து தயாரிக்க வெல்லத்தைப் பயன்படுத்துகிறார்கள்.
வெல்லத்தில் அதிக அளவு நார்ச்சத்து உண்டு. அது உணவுக் குழாய், வயிறு மற்றும் நுரையீரல் என உடலின் உள் உறுப்புகளை சுத்தம் செய்யக் கூடியது.
Also Read: Black Gram: உளுத்தம் பருப்பினால் உடலில் ஏற்படும் அற்புத மாற்றங்கள்..!
அதனால்தான் பலரும் உணவு உண்ட பிறகு ஒரு துண்டு வெல்லம் சாப்பிடுகிறார்கள். செரிமானத் திரவங்களைத் தூண்டிவிட்டு, ஜீரணத்தை சரி செய்யும் சக்தி வெல்லத்திற்கு உண்டு.
குறிப்பாக வெல்லத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது என்று டாக்டர் நிகாம் விளக்குகிறார்.