இயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Benefits Of Coconut Water: இளநீர் அருந்துவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்..!

Benefits Of Coconut Water: இளநீர் அருந்துவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்..!

தென்னைமரம் ஆசியாவை பூர்வீகமாக கொண்ட ஒரு மரமாகும். தற்போது உலகெங்கிலும் வெப்பமண்டல நாடுகளில் அதிகம் வளர்க்கப்படும் ஒரு பயிர் மரமாக தென்னை மரம் இருக்கிறது.

தென்னை மரத்தினால் மனிதர்களுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கின்றன.

Benefits Of Coconut Water

Benefits Of Coconut Water:

நமது சமையலில் அதிகம் உபயோகிக்கப்படும் தேங்காய் இந்த தென்னை மரத்தில் இருந்தே கிடைக்கிறது. அந்த தென்னை மரத்தில் தேங்காய் காயாக இருக்கும் போது இளநீர் எனப்படுகிறது.

இளநீர் மனிதர்களுக்கு தென்னை மரம் அளிக்கும் இயற்கையின் வரப்பிரசாதமாகும்.

அந்த இளநீரை மனிதர்கள் பருகுவதால் ஏற்படும் பல்வேறு உடல்நல ரீதியிலான நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

உடலுக்குக் குளிர்ச்சியை அளித்து ரத்தத்தில் சேர வேண்டிய தாது உப்புக்களை சேர்த்து, உடலின் செயல்திறனை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது இளநீர்.

இதயம், கல்லீரல், சிறுநீரகம், கண்கள் மற்றும் ரத்த நாளங்களில் உஷ்ணம் ஆதிக்கம் அடையாமல் இருக்க உறுதுணையாகிறது.

மூல நோயாளிகள், நாட்பட்ட சீதபேதி, ரத்த பேதி, கருப்பை ரணம், குருதிப் போக்கு காரணமாக வரும் ரத்த சோகை, உற்சாகமின்மை ஆகியவற்றிற்கு இளநீர் மிகச்சிறந்த நிவாரணம் அளிக்கின்றது.

பேதி, மயக்கம், அசதி ஏற்படும்போது 2 டம்ளர் இளநீர் சாப்பிடலாம்.

நீர்க்கடுப்பு பிரச்னை ஏற்பட்டால், இரண்டு டம்ளர் இளநீர் பருகிட 1 மணி நேரத்திற்குள் சிறுநீர் தாராளமாகப் போகும்.

சிறுநீர்த்தாரையில் சில நேரம் புண்ணாக இருந்தால் எரிச்சல், கடுப்பு உண்டாகும். அதற்கு இளநீரில் வெந்தயம் அரை ஸ்பூன் சேர்த்து கலந்து பருகி வர,5 நாளில் அவை நீங்கும்.

உடம்பெல்லாம் அனல்போல் தகித்தால் இளநீர் 8 மணிக்கொரு முறை பருகிவரத் தேக அனல் தணியும்.

Ilaneer-newstamilonline

டைபாய்டு, மலேரியா, மஞ்சள் காமாைல, அம்மை நோய்கள், டிப்தீரியா, நிமோனியா, வாந்தி பேதி, வயிற்றுப்புண், மலச்சிக்கல், சிறுநீரகக் கோளாறுகள் போன்றவற்றால் பாதிக்கப்படும்போது இளநீரைத் தாராளமாகக் குடிக்க வேண்டும்.

வயிற்றுப் பொறுமல், மந்தம், உணவு செரியாமை, பெருங்குடல் வீக்கம், ஈரல் கோளாறு, குடல் கோளாறுகள் என அனைத்திற்கும் இது மருந்து மற்றும் உணவும் ஆகும்.

காலரா நோயாளிகள் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறை இளநீரில் விட்டு அருந்தி வர வேண்டும்.

பித்தக்கோளாறு, பித்தக்காய்ச்சல் உள்ளவர்களுக்கும் இளநீர் இயற்கையான சத்து டானிக் ஆகும்.

காலையில் உடல்நலத்துக்கு ஊக்கம் தரும் மருந்தாக இளநீர் அருந்துங்கள். மதியம் தாகத்தைத் தீர்த்து உடலில் சக்தியைப் புதுப்பிக்க ஓர் இளநீர் அருந்தி வாருங்கள்.

Also Read: Foods To Avoid During Cough & Could: சளி, இருமல் இருந்தால், இந்த உணவுகளை தயவு செய்து சாப்பிடாதீங்க!

அதிகளவில் மது போதைக்குள்ளானவர்களின் போதைதெளிய இளநீரை சிறிது, சிறிதாக குடித்து வந்தால் உடல் இழந்த பொட்டசியம் சத்துக்களை மீண்டும் பெறுவதோடு அதிக போதையால் ஏற்படும் தலைவலி, கிறுகிறுப்பு தன்மை போன்றவை நீங்கி போதை தெளியும்.