News Tamil Onlineஇயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Benefits Of Carrot Juice: கோடைவெயிலை விரட்டியடிக்க கேரட் ஜூஸ்யை இந்த மாதிரி குடிச்சி பாருங்க! சோர்வு பறந்து போகும்..!

Benefits Of Carrot Juice: கோடைவெயிலை விரட்டியடிக்க கேரட் ஜூஸ்யை இந்த மாதிரி குடிச்சி பாருங்க! சோர்வு பறந்து போகும்..!

கோடைக்காலத்தில் சோர்வை தணிக்க நம்மில் பெரும்பாலோர் கடைகளில் விற்கும் குளிர்பானங்களை தான் அதிகம் விரும்பி குடிக்கிறோம்.

Benefits Of Carrot Juice
a

Also Read: Summer Juice Recipes: வெயில் காலத்தில் உடலுக்கு சக்தியை அள்ளித்தரும் தரும் பல வகை காய்கறி ஜூஸ்கள்..!

How to make carrot juice?

ஆனால், இதை நாம் தவிர்க்க வேண்டும். அது நம் உடலுக்கு கேடு விளைவிக்கும் ஒரு செயல் ஆகும்.

அதற்கு பதிலாக நாம் வீட்டிலேயே இயற்கையான முறையில் ஜூஸ் ரெடி பண்ணி போகும் இடங்களில் கொண்டு செல்லலாம்.

அது ஆரோக்கியமானதாகவும் இருக்கும், அதே சமயம் வெயிலின் தாக்கத்தினை குறைக்கும் வகையிலும் இருக்கும்.

அந்த வகையில் ஒரு சூப்பரான கேரட் ஜூஸ் எப்படி செய்வது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

பொதுவாகவே கேரட் நம் சருமத்திற்கு மிகவும் நல்லது இது எல்லோருக்கும் தெரிந்ததே.

இந்த கோடைகாலத்தில் சூரியனின் கதிர்வீச்சை நம் உடல் சருமம் தாங்க வேண்டுமென்றால் கேரட்டை கட்டாயம் நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பலரும் பல முறைகளில் கேரட் ஜூஸை தயாரிப்பார்கள். இது கொஞ்சம் வித்தியாசமானது. ஆனால் அதிக சுவை மிகுந்தது.

கேரட் ஜூஸ் செய்ய தேவையான பொருட்கள்:

இளம் பருவ கேரட்- 200 கிராம்

கொத்தமல்லித்தழை – 2 இனுக்கு

புதினா இலைகள் – 3

எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்

இஞ்சி – 1 துண்டு

தேன் அல்லது சர்க்கரை  தேவைக்கு ஏற்ப

செயல்முறையை பார்க்கலாம்:

Also Read: Can we eat paneer daily? பன்னீரை எப்படி நாம் சரியான முறையில் சாப்பிடலாம்..?

Benefits Of Carrot Juice:

முதலில் கேரட்டை எடுத்து தோலை சீவி, மிக்ஸியில் போட்டு அரைக்கும் அளவிற்கு  சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

சிறிய துண்டு இஞ்சியைத் தோல் சீவி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

புதினாவையும், கொத்தமல்லித் தழையையும் தண்ணீரில் கழுவி வைத்துக்கொள்ளுங்கள்.

முதலில், மிக்ஸி ஜாரில் நறுக்கிய கேரட் துண்டுகள், கொத்தமல்லி தழை,புதினா, இஞ்சி இந்த நான்கு பொருட்களையும் சேர்த்து இரண்டு டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி அரைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து ஒரு வடிகட்டியில் ஊற்றி கேரட் விழுதுகளை எல்லாம் நன்றாக அழுத்திப் பிழிந்து சாறை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

கேரட்டின் மணம் ஜூஸில் இருக்க வேண்டும், அதனால் அதிக அளவு தண்ணீரை ஊற்ற வேண்டாம். தேவையான அளவிற்கு தண்ணீரை பார்த்து, ஊற்றிக் கொள்ளுங்கள்.

வடிகட்டிய பின், கேரட் ஜூஸில் அரை ஸ்பூன் எலுமிச்சைச்சாறு மற்றும் ஒரு ஸ்பூன் தேனையும் கலந்து தேவைப்பட்டால் ஃப்ரிட்ஜில்(Fredge) வைத்து ஜில்லென்று குடித்து  பாருங்கள்.

நம் உடலுக்கு தேவையான புத்துணர்ச்சியும், ஆரோக்கியமும் உடனடியாக  கிடைத்துவிடும்.

Health benefits:

கேரட் ஜூஸ் பயன்கள்:

1. தினந்தோறும் கேரட் ஜூஸ் குடிப்பவர்களுக்கு எலும்புகள் வலுவடைந்து, அதன் உறுதித்தன்மையும் அதிகரிக்கும்.

2. இந்த ஜூஸ் வெகு விரைவில் நம் உடலில் ஏற்படும் காயங்களை ஆற்றவல்லது.

3. ரத்தத்தில் கொலஸ்ட்ரால் சேரும் அளவை கட்டுக்குள் வைக்கிறது.

4. உடல் செல்களின் ஆயுள் தன்மை அதிகரிக்கும், உடல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு குறையும்.

5. கண் பார்வை சிறப்பாக இருக்கும், கண் புரை நோய் ஏற்படுவது குறையும்.

6.இதிலுள்ள வேதிப்பொருட்கள் ரத்தத்தில் நோய்யெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, தொற்று வியாதிகளை விரைவாக குணப்படுத்துகிறது.

7. கல்லீரல் உணவுகளில் இருக்கும் விஷத்தன்மைகளை முறித்து, அதன் சிறந்த செயல்பாட்டிற்கும் வழிவகுக்கிறது.

8.பற்கள் சொத்தையாவது, ஈறுகளில் வீக்கம், மற்றும் வாய் துர்நாற்றம் போன்றவை வராமல் இருக்கும்.

9. இதிலுள்ள மூலப்பொருட்கள் உடல்செல்களின் வளர்சிதை மாற்றத்திறனை சமநிலைப்படுத்தி, உடலின் சீரான இயக்கத்திற்கும், உடல் நலத்திற்கும் உதவுகிறது.

10.கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ சருமத்தில் உள்ள வறட்சியை நீக்கி, சருமம் பொலிவு பெற உதவுகிறது.

Also Read: Food For Weight Loss: உடல்கழிவுகளை வெளியேற்றி எடையை குறைக்க உதவும் உணவுகள்..!

இவ்வளவு சிறப்பு மிகுந்த கேரட் ஜூஸ்யை நீங்களும் குடித்து ஆரோக்கியமான வாழ்வை பெறுங்கள்.