இயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Benefits of berry fruits: பெர்ரி பழங்கள் உடலுக்கு அளிக்கின்ற நன்மைகள்..!

Benefits of berry fruits: பெர்ரி பழங்கள் உடலுக்கு அளிக்கின்ற நன்மைகள்..!

பழங்கள் எல்லாமே ஆரோக்கியமானவை. ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான நன்மைகளை உடலுக்கு அளிக்கிறது.

blackberries-newstamilonline

Benefits of berry fruits:

பெர்ரி பழங்கள் குறித்தும் அவை உடலுக்கு தரும் நன்மைகள் குறித்தும் தெரிந்துகொள்வது அவசியம்.

பெர்ரி பழங்கள் சத்தானவை. சிறிய அளவில் இருக்கும் இந்த பெர்ரி பழங்கள் கூழ் போன்று இருக்க கூடும்.

வட்டவடிவில் நிறங்கள் வண்ணமயமாக இருக்கும். பிரகாசமாக இருக்கும். இதன் சுவை இனிப்பு, புளிப்பு சுவையை கொண்டிருக்கும்.

இது சுவையாகவே இருக்கும். சத்தானதும் கூட. மேலும் இது பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.

பெர்ரிகளில் ஆன் டி ஆக்ஸிடண்ட்கள் அதிகம் உள்ளன. உயர் கார்ப் உணவுகளோடு எடுத்துகொள்ளும் போது அல்லது ஸ்மூத்திகளில் சேர்க்கப்படும் போது இது இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவை மேம்படுத்தலாம்.

பெர்ரிகள் நார்ச்சத்து நிறைந்தவை. முழுமையான உணவை எடுத்துகொண்ட திருப்தியை அளிக்கும். 7 விதமான பெர்ரிகளின் நன்மைகள் குறித்து தெரிந்துகொள்வோம்.

நார்ச்சத்துகளின் நல்ல மூலம் ராஸ் பெர்ரி என்று சொல்லலாம். இது ஆக்ஸிஜனேற்ற பண்புகளுடன் பாலிபினால்களும் உள்ளன. இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்க செய்யும்.

ராஸ்பெர்ரி இதயநோய்க்கான அபாயத்தை குறைக்கின்றன. ராஸ் பெர்ரிகளில் அதிக பொட்டாசியம் உள்ளது.

இது ரத்த அழுத்தம் மற்றூம் இதயத்துடிப்பை கட்டுப்படுத்த உதவுகிறது. இது தாமிரம், இரும்பு மற்றும் மாங்கனீசு உள்ளிட்ட தாதுக்கள் நிறைந்தவை. இது சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்குகின்றன.

நார்ச்சத்து இருப்பதால் எடை இழப்பை ஊக்குவிக்கின்றன. இது செரிமான செயல்முறையை மெதுவாக்குகிறது.

ராஸ்பெர்ரி கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வைட்டமின் ஏ மற்றும் சி கண் சவ்வுகளை சுத்தம் செய்வதன் மூலம் கண் உலர்விலிருந்து பாதுகாக்கிறது.

ஆக்ஸிஜனேற்ற செறிவுகளில் ராஸ்பெர்ரி இருப்பதால் இது புற்றுநோயை எதிர்த்து போராடுகின்றன. இது பைட்டோநியூட்ரியண்ட்ஸ் மூலமாக வீக்கத்தை குறைகிறது.

வைட்டமின் சி உள்ளடக்கம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. நோய்த்தொற்று மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. சேதமடைந்த சரும திசுக்களை சரி செய்கிறது.

ப்ளூபெர்ரி வைட்டமின் கே -இன் சிறந்த மூலமாகும். இது ஆந்தோசயனின் என்ற தாவர கலவை உள்ளது.

இதுதான் ப்ளூ பெர்ரிகளுக்கு நீல நிறத்தை வழங்குகிறது. ப்ளூபெர்ரி எல்.டி.எல் கொழுப்பை குறைப்பதன் மூலம் மாரடைப்பை அபாயத்தை தடுக்க செய்கிறது.

இது தமனிகளின் செயல்பாட்டை அதிகரிப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தின் அம்சங்களாஇ மேம்படுத்தகூடும். இது நீரிழிவு அபாயத்தை குறைக்க செய்யலாம்.

ஒருகப் ப்ளூபெர்ரி நாள் ஒன்றுக்கு தேவையான வைட்டமின் சி ஒரு நபருக்கு 24% பரிந்துரைக்கின்றன.

கிரான்பெர்ரி பழங்கள்கிரான்பெர்ரி ஆரோக்கியமானவை. இது சாறு போல் எடுத்துகொள்ளப்படுகிறது.

இதில் ஆரோக்கியமான வைட்டமின்கள் மற்றும் தாவர கலவைகள் உள்ளன. இது இனிப்பு மற்றும் பழச்சாறுகளுடன் கலந்து குடிக்கப்படுகிறது.

பிளாக் பெர்ரி வைட்டமின்கள், மினரல்கள், ஆன் டி ஆக்ஸிடண்ட் நார்ச்சத்துக்கள் நிறைந்தவை.பிளாக் பெர்ரி வைட்டமின் சி வைட்டமின் கே மற்றும் மாங்கனீசு சத்துக்கள் மற்றும் தாதுக்கள் கொண்டவை.