Benefits Of Anise:சோம்புக்கீரையின்மருத்துவப் பயன்கள்..!
Benefits Of Anise:சோம்புக்கீரையின்மருத்துவப் பயன்கள்:
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பயிரிடப்படும் இந்த செடி மத்திய தரைக்கடல், ஆசியா, தெற்கு ரஷ்யா மற்றும் வட அமெரிக்கா போன்ற பகுதிகளை பூர்வீகமாகக் கொண்டுள்ளது.

Benefits Of Anise:
ஆனால், இன்றைக்கு உலகம் முழுவதும் இந்த கீரை கிடைக்கக்கூடிய வகையில் உள்ளது.
மூலிகை குணமிக்க இந்த செடி ‘செலரி’ கீரை வகை கொண்ட அபிசியா தாவர குடும்பத்தை சேர்ந்தது.
மேலும் மணமும் மருந்தும் ஒருசேர இணைந்த சிறப்பை பெற்றுள்ளது இந்த சோம்புக்கீரை.
ஆனால், ஆயுர்வேதத்தில் இன்றைக்கு இந்த இலைகள் சிறப்பிடம் இடம்பிடிக்கவில்லை.
பண்டைய காலங்களில் வாழ்ந்த கிரேக்கர்களும், எகிப்தியர்களும் இதன் நற்பயனை தெரிந்துக்கொண்டு அவர்கள் மருத்துவத்தில் பயன்படுத்தி வந்துள்ளனர்.
அதன் அடிப்படையில் சோம்புக்கீரையினை, எகிப்தியர்கள் வலிகளை குறைக்கும் மருந்தாகவும், கிரேக்கர்கள் தூக்கமின்மையை போக்கும் மருந்தாகவும் பயன்படுத்தி வந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இந்திய உணவுமுறையில், இந்த சோம்புக்கீரையின் இலைகளை பெரும்பாலும் சாலட் மற்றும் சூப்பில் அதிகம் பயன்படுத்தப்படுத்தி வந்துள்ளனர்.
சோம்புக் கீரையினை தொடர்ந்து உணவுகளில் எடுத்து வந்தாள், உடலிற்கு தேவையான உடனடி சத்துக்கள் கிடைக்கின்றன. அத்தகைய அபூர்வ பொக்கிஷம்தான் இந்த ‘சோம்புக்கீரை’.
மணமணக்கும் உணவில் மட்டுமல்ல, மருத்துவத்திலும் சோம்புக்கீரைக்கு தனி இடம் உள்ளது.
சோம்பின் இலை மற்றும் விதைகளில் கரோவோவன், ஏபியால், தில்-ஏபியால், பிளோவோனாய்டுகள், கௌமெரின்கள், ஸான்தோன்கள் மற்றும் டிரைடெர்பின்கள் போன்ற எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.
இது பல்வேறு தொற்று நோய்கள், காய்ச்சல், வறட்டு இருமல், சளி, குடல் மற்றும் வயிறு பிரச்சனைகளை சரி செய்கிறது.
How To Strengthen Uterus Naturally?
பெண்களுக்கு:
பெண்களுக்கு அரும்பெரும் மருந்தாக சோம்பின் இலைகள் பயன்படுகிறது. இது கருப்பையில் இருக்கும் அழுக்குகளை சுத்தப்படுத்துவதோடு, மாதவிடாய் சம்பந்தமான பிரச்சனைகளையும் சரிசெய்கிறது.
மேலும், தாய்ப்பால் சுரத்தலை அதிகப்படுத்தவும், குழந்தைகளின் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்யவும் உதவுகிறது.
ஊட்டச்சத்துக்கள்:
விட்டமின் A,C, ஃபோலேட், ரிபோஃப்ளவின், நியாசின், தையமின், விட்டமின் பி6, பாந்தனிக் அமிலம், மினரல்ஸ்,கால்சியம்,பொட்டாசியம், இரும்பு, மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ்,சோடியம்,ஜிங்க், காப்பர் என உடலுக்கு தேவையான எண்ணற்ற சத்துக்கள் இந்த சோம்புக் கீரையில் நிறைந்து காணப்படுகிறது.
நூறு கிராம் ஃப்ரஷ் இலையில் 43 கலோரிகள் அடங்கியிருக்கின்றன. இதன் அடிப்படையில், தினமும் 7 கிராம் இலைகள் வரை ஒருவர் சாப்பிட்டால், உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் கிடைப்பதாக அமெரிக்க வேளாண்துறை தெரிவித்துள்ளது.
ரத்த அழுத்தம்:
ஒரு சில ஆய்வுத் தரவுகள் சோம்பின் இலைகள் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவாக பயன்படுகிறது என கூறுகின்றனர்.
உடலின் வளர்சிதை மாற்ற நோய்க்கு மருந்தாக பயன்படுவதோடு, ரத்தத்தில் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துவதாக கூறுகின்றனர்
அலர்ஜி ஏற்படும்:
அலர்ஜி இல்லாத மனிதர்களே கிடையாது. ஏனெனில், எல்லா உணவும் அனைவருக்கும் ஒத்துப்போவதில்லை. ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடியதுதான் சோம்புக்கீரை.
கேரட் அலர்ஜி இருப்பவர்களுக்கு இந்த சோம்புக்கீரை இலைகளும் ஒவ்வாமையை ஏற்படுத்தும்.எனவே, தவிர்ப்பது நல்லது.
ஒவ்வாமையின் அறிகுறிகளாக வாந்தி, உமிழ்நீர் சுரத்தல், தொண்டை மற்றும் நாக்கில் எரிச்சல் உணர்வு, டயரியா போன்றவையும் ஏற்படும்.
அடுத்து இதை பயன்படுத்துவது எவ்வாறு என்று பார்க்கலாம்,
Benefits Of Eating Spinach:
சோம்பு கீரை பொரியல்:
தேவையான பொருட்கள் :
சோம்பு கீரை – 2 கப்
சின்ன வெங்காயம் – 50 கிராம்
காய்ந்த மிளகாய் – 4
உப்பு – தேவையான அளவு
துருவிய தேங்காய் – தேவையான அளவு
தாளிப்பதற்கு:
நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுந்தம்பருப்பு – 1/4 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
முதலில் சோம்பு கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பின் சின்ன வெங்காயத்தை எடுத்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அடுத்து வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் கடுகு, உளுந்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
Also read:Manathakkali Keerai Benefits: உடலுக்கு நன்மை அளிக்கும் அற்புத மணத்தக்காளிக் கீரை..!
வெங்காயம் வதங்கியதும் அதில் நறுக்கி வைத்துள்ள சோம்பு கீரையை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
கூடவே, தேவையான அளவு உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.
கீரை சரியான பக்குவத்தில் வெந்தவுடன் அதனுடன் சிறிது துருவிய தேங்காயினையும் போட்டு கிளறி இறக்கி பரிமாறிக்கொள்ளுங்கள்.
சத்தான சோம்பு கீரை பொரியல் தயார்.
இத்தகைய மருத்துவத்திறன் கொண்ட சோம்பினை உண்டு ஆரோக்கியமான வாழ்க்கையினை வாழுங்கள்.