இயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Benefits Of Almond: தூக்கத்தைத் தூண்டும் தன்மை கொண்ட பாதாம்..!

Benefits Of Almond: தூக்கத்தைத் தூண்டும் தன்மை கொண்ட பாதாம்..!

தூக்கமின்மைக்கு பல காரணங்கள் இருக்கின்றன. மன அழுத்தம், மனச்சோர்வு, செரிமான பிரச்சனை போன்றவையும் தூக்கத்தை சிதைக்கக்கூடியவை. சிலவகை இயற்கை உணவுகள் தூக்கத்தைத் தூண்டும் தன்மை கொண்டவை. அவை குறித்து பார்ப்போம்.

Benefits Of Almond - newstamilonline

தூங்க செல்வதற்கு முன்போ அல்லது பகல் வேளையிலோ சிறிதளவு பாதாம் சாப்பிட்டுவந்தால் தூக்கத்தை மேம்படுத்தும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் ஹார்மோனான ‘மெலடோன்’ மற்றும் தூக்கத்தை ஊக்குவிக்கும் கனிமமான ‘மெக்னீசியம்’ இதில் ஏராளம் இருக்கிறது.

அவை நீண்ட நேரம் மற்றும் ஆழமான தூக்கத்திற்கு வழிவகை செய்யும்.

மேலும் மூளை மற்றும் நரம்புகளில் இனிமையான விளைவுகளை ஏற்படுத்தும் டிரிப்டோபன் அமினோ அமிலத்தின் செயல்பாட்டையும் மேம்படுத்தும்.

அதன் காரணமாக தூக்கம் தடைபடுவது தவிர்க்கப்படும்.

தூக்கமின்மை பிரச்சினைக்கு ஆளாகுபவர்கள், வாழைப்பழத்தையும் சாப்பிடலாம். அதிலும் டிரிப்டோபன் அமினோ அமிலம் நிறைந்திருக்கிறது.

இது மூளைக்கு சமிக்ஞை கொடுத்து தூக்கத்தை வரவழைக்க செய்யும் வேதிப்பொருட்களை உருவாக்க உதவும்.

Benefits Of Almond:

தூக்கத்தை ஊக்குவிக்கும் தன்மை பாலுக்கும் இருக்கிறது. வெறுமனே பாலை பருகாமல் அதில் சிறிதளவு மஞ்சள், குங்குமப்பூ கலந்து பருகினால் நன்றாக தூக்கம் வரும். அதிலும் டிரிப்டோபன் அமினோ அமிலம் நிறைந்திருக்கிறது.

நடைப்பயிற்சி, யோகா செய்பவர்கள் பால் பருகி வந்தால் எந்த இடையூறுமின்றி நன்றாக தூங்கி எழலாம்.

இரவு குறைவாக சாப்பிடுவதே நல்லது. ஓட்ஸ் உணவை சாப்பிட்டுவந்தால் ஆரோக்கியம் மேம்படுவதோடு ஆழ்ந்த தூக்கத்தையும் தூண்டும். அதில் மன அழுத்தத்தை குறைக்கும் வைட்டமின் பி6 சத்தும் நிறைந்திருக்கிறது.

பாதாம்பால்:

பாதாம் பருப்பில் மெக்னீசியம் அதிகப்படியாக உள்ளதால் தசைகளை தளர்வடைய செய்வதுடன் அருமையான தூக்கத்தை தரும் மற்றும் இதில் உள்ள புரதசத்து தூங்கும்போது ரத்த சர்க்கரை அளவை சீராக இருக்க மிகவும் உதவுகிறது. எனவே தூக்கத்திற்கு முன்பு பாதம் பால் சாப்பிடுவது மிகவும் நல்லது.

பால் பொருட்கள்:

பால், தயிர், மோர், வெண்ணை போன்ற பால் பொருட்களில் ட்ரிப்டோபேன் என்ற வேகமாக தூக்கத்தை தூண்டும் வேதிப்பொருள் இருப்பதால்இதை சாப்பிட்டால் நல்ல தூக்கத்தை அடைய முடியும்.பால் பொருட்கள்களை இரவினில் சாப்பிடுவதால் மூலமாக மன அழுத்தம் மிகவும் குறைந்து நல்ல அருமையான தூக்கத்தை பெறலாம்.

முட்டை:

புரதம் அதிக அளவில் முட்டையில் உள்ளதால் இரவினில் சாப்பிடுபவர்கள் நல்ல ஆழ்ந்த தூக்கத்தை தரும்.

செர்ரிபழம்:

5, 6 செர்ரிபழங்களை தூங்குவதற்கு முன் சாப்பிட்டால் நல்ல இடையூறு இல்லாத தூக்கத்தை அடைய முடியும்.

Also Read: ஒரு நாளின் தொடக்கத்தில் நாம் செய்யவே கூடாத விஷயங்கள்..!

செர்ரிபழம் சாப்பிடுவதால் இளமையாக இருக்க முடியும்.