Thatstamil NewsToday Tamil News Onlineஇயற்கையோடு வாழ்வோம்செய்திகள்பழங்கள்மூலிகைகள்

Herbalife Weight Loss: எடையை குறைக்க உதவும் பானானா டீ..!

Herbalife Weight Loss: எடையை குறைக்க உதவும் பானானா டீ..!

நீங்கள் அனைவரும் இதுநாள் வரை கிரீன் டீ அல்லது ப்ளைன் டீ அருந்தியிருப்பீர்கள். ஆனால் இன்று பனானா டீ என்று ஒன்று இருப்பது உங்களுக்கு தெரியுமா?

Banana Tea Benefits-newstamilonline

Banana Tea:

எடை இழப்பைக் குறைப்பது மட்டுமல்லாமல், உடல் பருமன் மற்றும் இதய நோய்களின் அபாயத்தையும் குறைக்கும் இந்த பனானா டீ-க்கு தற்போது அதிக டிமேண்ட் தென்படுகிறது.

இந்த தேநீர், கிரீன் டீ போன்ற பல நன்மைகளைக் கொண்டுள்ளது. இந்நிலையில் இந்த டீ-யினை எவ்வாறு தயாரிப்பது, அதன் நன்மைகள் என்ன என்பதை நாமும் தெரிந்து கொள்ளலாமே..

பொதுவாக பானானா டீ-யினை இரண்டு வழிகளில் தயாரிக்கலாம்

முதல் வழி :

ஒரு பாத்திரத்தில் 2-3 கப் தண்ணீரை ஊற்றி சூடேற்றவும். பின்னர் இதில் ஒரு பழுத்த வாழைப்பழத்தை தோலுரித்து 5-10 நிமிடங்கள் குறைந்த வெப்பத்தில் வேகவைக்கவும். இப்போது இதில் இலவங்கப்பட்டை அல்லது தேன் சேர்த்து குடிக்கவும்.

இரண்டாவது வழி :

ஒரு பாத்திரத்தில் 2-3 கப் தண்ணீரை ஊற்றி சூடேற்றவும். இந்த கொதிக்கு தண்ணீரில் வாழைப்பழங்களை கழுவி, குறைந்த தீயில் 10-15 நிமிடங்கள் வேகவைக்கவும், பின்னர் அதை வடிகட்டி அதில் இலவங்கப்பட்டை அல்லது தேன் சேர்த்து பருகவும்.

Banana Tea Benefits receipe-newstamilonline

நன்மைகள்:

  • பனானா டீ வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது, இது கொழுப்பை எரிக்க உதவுகிறது. இதைக் குடித்த பிறகு, பசியும் குறைகிறது.
  • மேலும் இந்த தேநீர் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இது இரத்த நாளங்கள் மற்றும் தமனிகள் மீதான அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் இதய நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது.
  • செரோடோனின், டோபமைன் மற்றும் டிரிப்டோபான் நிறைந்த இந்த தேநீர் சிறந்த தூக்கத்திற்கு நல்லது. தினமும் 1 கப் பானானா டீ அருந்தினால் உங்களுக்கு நல்ல தூக்கம் வரும்.

Also Read: How to Grow Hair Faster: மணத்திற்காக சேர்க்கப்படும் கறிவேப்பிலை நமக்கு தரும் நன்மைகள் பற்றி தெரியுமா?

  • ஒவ்வொரு நாளும் 1 கப் டீ உட்கொள்வது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், இதனால் நீங்கள் சளி-இருமல், பாக்டீரியா தொற்று மற்றும் பிற நோய்களிலிருந்தும் விலகி இருக்க முடியும்.
  • வாழைப்பழ தேநீர் ஹார்மோன் அளவை சமநிலைப்படுத்தவும் மன அழுத்தத்தை ஏற்படுத்தாத மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.