Augmented Reality Examples: தென்கொரியாவில் அறிமுகமான புதிய தொழில்நுட்பம்..! கற்பனை முகத்தை காட்டும் ‘Augmented Reality’ கண்ணாடி..!
Augmented Reality Examples: தென்கொரியாவில் அறிமுகமான புதிய தொழில்நுட்பம்..! கற்பனை முகத்தை காட்டும் ‘Augmented Reality’ கண்ணாடி..!
தென்கொரியாவில் அழகு சாதனப் பொருட்கள் விற்கும் கடைகளின் உபயோகத்திற்கான புனை மெய்மை என்று சொல்லப்படும் Augmented Reality கண்ணாடி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Augmented Reality Examples:
முதலில் நாம் Augmented Reality-ன் பொருள் என்ன என்பதை தெரிந்துகொள்வோம்,
ஆக்மென்டட் ரியாலிட்டி என்பது நமது “இயற்பியல் உலகத்தை விரிவுபடுத்தும் ஓர் தொழில்நுட்பமாகும்“, இது டிஜிட்டல் தகவல்களின் அடுக்குகளைச் தன்னுள் சேர்க்கிறது.
விர்ச்சுவல் ரியாலிட்டி (VR) போலல்லாமல், மெய் உருவம் ஒன்றை அதன் புகைப்படத்தினை மாற்றுகிறது. மேலும், இந்த Augmented Reality முழு செயற்கை சூழல்களையும் உருவாக்கவில்லை.
இது, ஏற்கனவே இருக்கும் சூழலின் நேரடி பார்வையில் தோன்றும்,
மற்றும் அதில் ஒலிகள், வீடியோக்கள், கிராபிக்ஸ் ஆகியவற்றைச் சேர்க்கிறது.
Augmented Reality மிகைப்படுத்தப்பட்ட கணினி-உருவாக்கப்பட்ட படங்களுடன் கூடிய இயற்பியல் நிஜ-உலக சூழலின் பார்வையினை காண்கிறது.
AR அதன் இரண்டாவது அலையை உருவாக்கியது, இதிலுள்ள 3D நேரடியாக உடல் அமைப்புகளில் பொருந்தும் வகையில் திட்டமிடப்படுகின்றன, அல்லது நிகழ்நேரத்தில் ஒன்றாக இணைக்கப்படுகின்றன.

தென்கொரியாவில் கண்டுபிடிப்பு:
தென்கொரியாவில் அழகு சாதனப் பொருட்கள் விற்கும் கடைகளின் உபயோகத்திற்கான புனை மெய்மை என்று சொல்லப்படும் Augmented Reality கண்ணாடி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அழகு சாதனப் பொருட்களை வாங்கச் செல்லும் பெண்கள் தங்களுக்குப் பிடித்தமான லிப்ஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை பொருத்தமானதா என்பதை கண்ணாடியில் பார்த்தே வாங்குவது வழக்கம்.
ஆனால் அப்பழக்கம் இந்த கொரோனா வந்த பின் யாரும் கையாளுவதே இல்லை, நிறம் தங்களுக்கு பொருத்தமாக இருக்கிறதா என்பதனை உபயோகித்துப் பார்த்து வாங்கிய காலம் எல்லாம் மறைந்துவிட்டது.
எனவே, இந்த AR ஆனது, பெண்களுக்கு உதவும் வகையில் புதிய மென்பொருள் ஒன்றினை தென்கொரியாவில் வடிவமைத்துள்ளது.
இந்த கண்ணாடியில் அவர்கள் தங்கள் விரும்பும் பொருளை டிக் செய்தால் போதும், அடுத்த நொடி அந்த பொருளை உபயோகிக்கும்போது சம்பந்தப்பட்ட பெண்ணின் முகம் எப்படி இருக்கும் என்பதை மென்பொருள் கண்ணாடியில் காட்டி விடும்.
இந்த முறையில் பொருட்களை வாங்க தற்போது பெண்களிடத்தில் வரவேற்பு பெருகி இருக்கிறது.
முகத்தில் முகமூடி அணிந்திருந்தாலும் கூட இந்த (AR) கண்ணாடி,
அவர்களுக்கு ஏற்ற பொருட்களை தேர்வு செய்துக் கொடுக்கிறது.
முதலில் இக் கண்ணாடி வாடிக்கையாளரின் முகத்தினை புகைப்படமாக எடுத்து அதை பகுப்பாய்வு செய்கிறது.
பின், அக்கண்ணாடி வாடிக்கையாளரின் தோல் அமைப்பு மற்றும் நிறத்தினை பொருத்து தங்கள் தயாரிப்புகளை பரிந்துரைக்கிறது.
மேலும், நம் முகத்தில் ஏதேனும் கறைகள், சுருக்கங்கள் அல்லது கருவளையங்கள் போன்றவைகள் இருந்தால் அவற்றை நிவர்த்தி செய்கிறது.
வாடிக்கையாளர்கள், கணினி உருவாக்கிய படத்தை பார்க்கும் போது, அது அவர்களுக்கு பொருந்தக்கூடிய ப்ளஷ், கண் தயாரிப்புகள் மற்றும் லிப்ஸ்டிக் போன்றவற்றை அணிந்துகொள்வது போல் காண்பிக்கிறது.
Also Read: சீனாவில் வருகிறது மணிக்கு 620 கிமீ வேகத்தில் பயணிக்கும் மிதக்கும் அதிவேக ரயில்..!
Augmented Reality இன் புதிய இக்கண்டுபிடிப்பின் மூலம் பெண்கள் நேரடியாகவே தங்கள் முகத்திற்கு ஏற்ற அழகுப்பொருள்களை எளிதில் டெமோ காணமுடிகிறது.
இக் கண்டுபிடிப்பு பெண்களுக்கு மிகவும் தேவைக்குரிய ஒன்றாக விளங்குகிறது.