News Tamil OnlineToday Tamil News Onlineஅறிவியல்உலகம்கண்டுபிடிப்புசெய்திகள்

Asteroid: பூமியை நெருங்கும் 62,084கி.மீ வேக சிறுகோள் – NASA தகவல்..!

Asteroid: பூமியை நெருங்கும் 62,084கி.மீ வேக சிறுகோள் – NASA தகவல்..!

வளிமண்டலத்தில் உள்ள சிறுகோள் ஒன்று பூமிக்கு வரவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

சிறுகோள் என்பது சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே நம் சூரிய குடும்பத்தில் எஞ்சி இருப்பவை ஆகும்.

Asteroid

Asteroid:

பெரும்பாலான சிறுகோள்கள் ஒழுங்கற்ற வடிவத்தில் உள்ளன. இதில் சில கோள்களைப் போன்று இருந்தாலும் பெரும்பாலும் குழிகள் அல்லது ஆழமான பள்ளங்களைக் கொண்டவையாக இருக்கின்றன.

விண்வெளியில் ஆங்காங்கே சிறுகோள்கள் மிதந்துக் கொண்டிருக்கின்றன.

பெரும்பாலான சிறுகோள்கள் நிலையற்ற பாதையில் விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கின்றன.

இதில், சில சிறுகோள்கள் பூமிக்கு மிக நெருக்கமாக பயணித்து கொண்டிருக்கின்றன.

பூமியின் ஈர்ப்பு விசை:

சூரிய மண்டலத்தில் பல்வேறு விண்கற்கள் மிதந்துக் கொண்டிருக்கின்றன. இவைகளில் சில பூமியில் இருக்கும் ஈர்ப்பு விசை காரணத்தால் வளிமண்டலத்துக்குள் நுழைகிறது.

மேலும் விண்வெளியில் இருந்து கீழே விழும் பொருட்கள் காற்றின் அடர்த்தி மற்றும் அதன் அதிவேகத்தால் தீப்பிடிக்க வாய்ப்புகள் அதிகம்.

பூமியின் பெரும்பகுதி கடலால் சூழப்பட்டிருப்பதால் வானில் இருந்து விழும் பெரும்பாலான பொருட்கள் கடலிலேயே விழுவதாக கூறப்படுகிறது.

பில்லியன் கணக்கான சிறுகோள்கள் மற்றும் பில்லியன் கணக்கான சிறிய பாறைகள் மற்றும் உலோக பாறைகள் சூரிய குடும்பத்தில் நீந்துகின்றன.

சில விண்கற்கள் பூமியை நோக்கி வரும்பட்சத்தில் பூமியில் மேற்புறத்தில் இருந்து வரும் ஈர்ப்பு விசை, அவைகளை பூமியை நோக்கி ஈர்க்கிறது. அதேசமயம் அதன் பயண வேகமும் அதிகரிக்கிறது.

“நிலையற்ற பாதையில் மிதந்துக் கொண்டிருக்கும் சில சிறுகோள்கள் கிரகங்களை விபத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது” என்று சிறுகோள்களை கண்காணிக்கும் நாசா கூறுகிறது.

இதை அறிந்து கொண்ட நாசாவின் கிரக பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அலுவலகம் சிறுகோள் பயணிக்கும் பாதை, அதன் அளவு மற்றும் வேகம் உள்ளிட்டவைகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

குறிப்பாக பூமியை நோக்கி பயணிக்கும் சிறுகோள்கள் மற்றும் பூமிக்கு ஆபத்து விளைவிக்க வாய்ப்பு இருக்கும் சிறுகோள்களை நாசாவின் கிரக பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அலுவலகம் கண்காணித்து வருகிறது.

Asteroid hitting Earth

Asteroid hitting Earth:

சிறுகோள் 2020 BP:

80 அடி சிறுகோள் ஒன்று பூமியை நோக்கி வேகமாக நெருங்கி வருவதை கண்டறிந்த நாசாவின் கிரக பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அலுவலகம் இதை குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிறுகோளுக்கு 2020 BP என பெயரிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த சிறுகோள் பூமிக்கு அருகில் ஆபத்தான முறையில் பயணிக்கிறது என்று கணித்த காரணத்தால், நாசா Asteroid 2020 BP குறித்து ரெட் அலர்ட்(Red Alert) விடும் வகையில் இந்த சிறுகோளை சிவப்பு கொடியில் மார்க் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

3.5 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் சிறுகோள் பூமிக்கு மிக அருகில் வரும் என நாசா கணித்துள்ளது.

மணிக்கு 62084 கிலோமீட்டர் வேகம்:

நாசாவின் தகவல்படி, 2020 BP என்ற சிறுகோள் ஆனது, மணிக்கு கிட்டத்தட்ட 62084 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

இது ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணையின்(hypersonic ballistic missile) வேகத்தை விட மிக அதிகம்.

சிறுகோள் 2020 BP அளவு 80 அடி அகலமாகும்.

அதாவது, இந்த சிறுகோள் ஆனது சுமார் ஒரு வணிக விமானத்தின் அளவை விட அதிகமான அளவை கொண்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.

When is an Asteroid next Predicted to hit the Earth?

சிறுகோள் 2020 BP ஆனது அப்போலோ சிறுகோள்களின் குழுவிற்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுகோள் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதாவது ஜனவரி 18, 2020 அன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறுகோள் சூரியனை ஒருமுறை சுற்றி முடிக்க 1089 நாட்கள் எடுத்துக் கொண்டது.

Also Read: Mars Planet: கரடி பொம்மை வடிவ செவ்வாய் கிரக பாறைகளை நாசா உளவு பார்க்கிறது..!

சூரியனை சுற்றும் பாதையை வைத்து கணிக்கும் போது, சிறுகோள் 2020 BP ஆனது சூரியனில் இருந்து அதிகபட்சமாக 508 மில்லியன் கிலோமீட்டர் தூரமும், நெருக்கமாக 111 மில்லியன் கிலோமீட்டர் தூரமும் பயணிக்கிறது என நாசா தெரிவித்துள்ளது.

சிறுகோள் பூமியை நோக்கி வந்தாலும் அது பூகம்பம் மற்றும் சூனாமி போன்ற அசம்பாவிதங்களை தூண்டாது எனவும் நாசா தெரிவித்துள்ளது.