Andrographis Paniculata Benefits: எவ்வித காய்ச்சலையும் குணப்படுத்துமாம் நிலவேம்பு..!
Andrographis Paniculata Benefits: எவ்வித காய்ச்சலையும் குணப்படுத்துமாம் நிலவேம்பு..!
நிலவேம்பு தமிழகத்தின் சமவெளிப் பகுதிகளில் பரவலாக விளையக்கூடிய ஒரு மருத்துவக்குணம் உள்ள தாவரம் ஆகும்.

Andrographis Paniculata Benefits:
மருத்துவர்களில் முக்கியமாக விஷக்கடி மருத்துவம் செய்பவர்களின் வீட்டுத் தோட்டங்களில் பெரும்பாலும் இதனை காணலாம்.
நிலவேம்பின் முழுத் தாவரமும் மருத்துவக் குணம் நிறைந்து காணப்படுகிறது. கசப்புச் சுவை அதிகமான தாவர வகையிலே நிலவேம்பு தான் முதல் இடம் பெறுகிறது என்று கூறலாம்.
கொரோனா காலங்களில் மக்கள் நிலவேம்பினை தான் தேவாமிர்தம் போல் எண்ணி குடித்து வந்தனர்.
தீவிர காய்ச்சல் சரியாவதற்கு, நிலவேம்பின் முழு தாவரத்தையும் எடுத்து, நீரில் அதை இட்டு காய்ச்சி 30 மிலி வீதம் காலை மாலை வேளைகளில் 3 நாள்கள் முறையில் குடித்து வந்தனர்.
இவ்வாறு பல நன்மைகள் மிகுந்த இந்த நிலவேம்பினை பற்றி இன்னும் தெரிந்துக் கொள்வோம் வாருங்கள்,
காய்ச்சலைக் கட்டுப்படுத்த சுண்டைக் காய் அளவு நிலவேம்பு இலைப் பசையை காலை மாலை இரு வேளைகளில் குடித்து வந்தால் காய்ச்சல் குணமாகும்.
நோய்களுக்கு, நிலவேம்பு இலையினை பொடி செய்து காலையில் உண்ணலாம், அல்லது 5 பெரியா நங்கை இலைகளுடன் 10 சீரகம் சேர்த்து மென்று சாப்பிடலாம்,
அல்லது, நிலவேம்பின் வேரில் இருந்து கஷாயம் தயாரித்து, தினமும் ஒரு டம்ளர் வீதம் இரவில் மட்டும் 3 நாள்களுக்கு குடிக்கலாம். நோய்களிலிருந்து தப்பிக்க நல்ல எதிர்ப்பு திறன் கிடைக்கும்.
How To Cure Scabies Fast?
சொறி, சிரங்கு போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நிலவேம்பின் முழுத் தாவரத்தையும் உலர்த்திப் பொடியாக்கி சேகரித்து வைத்துக்கொள்ளலாம்.
பின், குளிக்கும் போது, தேவையான அளவு இதனை நீரில் குழைத்து பசையாக்கி உடலில் தேய்த்து 15 நிமிடங்கள் வரை ஊற வைத்து பின் குளிக்கலாம்.
இதனால் வண்டுகடி, சொறி, சிரங்கு போன்றவை குணமாகும். கூடவே, இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வரும் தன்மையும் நிலவேம்பிற்கு உண்டு.
வீட்டுத்தோட்டத்தில் நிலவேம்பினை வளர்த்தால், இது இருக்கும் இடத்தில் விஷ பூச்சிகள்,பாம்புகள் போன்றவை அண்டாது.
Andrographis Paniculata Uses:
குடற்புழு நீங்கும்:
நாம் உண்ணும் உணவில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை, நம் உடலில் இருக்கும் தேவையற்ற குடற்புழுக்கள் எடுத்துவிடுகின்றன.
இதனால் நாம் நோயின் தாக்குதலுக்கு ஆளாகிறோம்.
இந்த குடற்புழுக்கள் நீங்க, நிலவேம்பு இலையை நீரில் கொதிக்க வைத்து கஷாயமாக்கி மூன்று நாட்கள் தொடர்ந்து காலைவேளையில் குடித்து வந்தால், உடல் வலுப்பெற்று, நோய்யெதிர்ப்பு சக்தியும் கிடைக்கும்.
உடல் தேறாமல் மெலிந்து காணப்படுபவர்கள் கூட இந்த நில வேம்பு கசாயத்தினை குடித்து வந்தால் பலன் கிடைக்கும்.
மயக்கம் நீங்க:
சிலருக்கு அடிக்கடி மயக்கம் உண்டாகும். அதிர்ச்சியான நிகழ்வுகளை காணும்போது மயக்கம் ஏற்படும். இந்த மயக்கம் தீர நிலவேம்பு கசாயம் அருந்துவது நல்லது.
பித்த அதிகரிப்பைக் குறைக்கும்:
பித்தநீர் உடலில் அதிகமானால் உடலில் பல நோய்கள் உருவாகிறது. இதனால் வாந்தி, மயக்கம் உண்டாகும்.
இத்தகையோர், நிலவேம்பை நிழலில் உலர்த்தி பொடி செய்து கஷாயம் போட்டு குடித்து வந்தால் பித்தம் குறையும்.
தலைவலி நீங்கும்:
பெரும்பாலானோருக்கு அடிக்கடி தலைவலி உண்டாகி பெரிதும் அவதிக்குள்ளாவார்கள்.
அத்தகையோர், இந்த நிலவேம்பு கசாயத்தை தினமும் இருவேளை குடித்து வந்தால் போதும், நல்ல பலன் கிடைக்கும்.
கூடவே, தலையில் ஏற்படும் நீர்க்கட்டு குறையும். தும்மல், இருமல் போன்றவையும் ஏற்படாது.
குழந்தைகளுக்கு:
வயிற்றுப் பெருமல் அல்லது கழிச்சல் உள்ள குழந்தைகளுக்கு இந்த நிலவேம்பு சாறினை கொதிக்க வைத்து ஆறிய பின் 5 மி.லி கொடுத்து வந்தால்போதும் வயிற்றுப் பெருமல் சரியாகும்.
அஜீரணக் கோளாறு:
நில வேம்பு (காய்ந்தது) 16 கிராம், வசம்புத் தூள் 4 கிராம், சதக்குப்பை விதைத் தூள் 4 கிராம், கோரைக் கிழங்கு தூள் 17 கிராம். இவை அனைத்தையும் 1 டம்ளர் நீரில் இட்டு நன்கு கொதிக்க வைத்து அதை ஒரு மணி நேரம் வரை ஊறவைத்து எடுத்து வடிகட்டி தினமும் 2 அல்லது மூன்று வேளை அருந்திவந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.
கர்ப்பப்பை கட்டிகள்:
தைராய்டு நோய் உள்ளவர்கள் இந்த நிலவேம்பை காயவைத்து கசாயம் செய்து குடித்தால் தைராய்டு பாதிப்புகள் குறையும். மேலும் பெண்களுக்கு உண்டான சூதகக் கட்டி, கர்ப்பக் கட்டி, தேவையற்ற நீர் போன்றவற்றையும் இது நீக்கும்.
குறிப்பு:
7 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு இந்த கசாயத்தை மருத்துவரின் பரிந்துரையில்லாமல் கொடுக்கக்கூடாது.
அதேபோல் காய்ச்சலினால், தொடர் வாந்தி, வயிற்றுவலி ஏற்பட்டு சிரமப் படுபவர்கள் இந்த கஷாயத்தினை குடிப்பதை தவிர்ப்பது நல்லது.
முன்னெச்சரிக்கையாக வீட்டில் டெங்கு காய்ச்சல் வந்து பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால், அவருடன் சேர்த்து வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் நோய் பரவ வாய்ப்புள்ளது.
அதற்குள் உடனே இந்த நிலவேம்பு கசாயம் குடிக்கலாம், இது சிறந்த நோய் எதிர்ப்பு திறனை தரும்.
காய்ச்சல் வந்த நாளே நிலவேம்பு கசாயம் குடிப்பது நல்லது.
எல்லா ஆலோசனைகளையும் மருத்துவரின் பரிந்துரைப்படி செய்யுங்கள்.