Telecom Price Increase: டெலிகாம் கட்டண உயர்வு அவசியம் – ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல்..!

Telecom Price Increase: டெலிகாம் கட்டண உயர்வு அவசியம் – ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல்..!

இந்திய டெலிகாம் நிறுவனங்கள் ஏற்கனவே சேவை கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ள நிலையில் நாட்டின் முன்னணி டெலிகாம் சேவை நிறுவனமாக இருக்கும் ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் முக்கியமான விஷயத்தைத் தெரிவித்துள்ளார்.

Telecom Price Increase

Telecom Price Increase:

தற்போது சந்தையில் இருக்கும் டெலிகாம் சேவைக்கான கட்டணம் மிகவும் குறைவாக உள்ளது. இந்தக் கட்டணம் மேலும் தொடர்ந்தால் டெலிகாம் துறையால் தாக்குப்பிடிக்க முடியாது.

இதனால் தற்போதைய சந்தை நிலைமைகளுக்கு ஏற்ப கட்டண உயர்வை நோக்கி நாம் செல்ல வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

கட்டணத்தைப் பொருத்தவரை, ஏர்டெல் நீண்ட காலமாக உயர்த்தாமல் இருக்கிறது. இப்போது விலைகளை அதிகரிக்க வேண்டிய நேரம் இது என்று அவர் கூறினார்.

5 ஜி நெட்வொர்க்கில் (5G Network) சீன நிறுவனங்களுக்கு நுழைவு வழங்கப்பட வேண்டுமா, இல்லையா என்று கேட்டதற்கு,

இது ஒரு முக்கிய முடிவு என்றும், நமது அரசு எந்த முடிவை எடுத்தாலும் அது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் சுனில் மிட்டல் கூறினார்.

ஏர்டெல் (Airtel) நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் செய்தி நிறுவனமான பி.டி.ஐ-க்கு அளித்த பேட்டியில் கூறியது,

“ஒரு காலத்திற்குப் பிறகு கட்டண உயர்வு தேவை என்றும், தற்போதைய கட்டணத்தை தொடர்ந்து வைத்திருப்பது கடினம் என்று அவர் கூறினார்.

சந்தை நிலைமைகளை மதிப்பிட்ட பிறகு, விலை உயர்த்துவது பற்றி கருத்தில் கொள்ளவேண்டும்.

இந்த விலை உயர்வு எதிர்காலத்தில் தொலைத் தொடர்புத் துறையின் வலிமையைத் தீர்மானிக்கும் என்று அவர் கூறினார்.

தொலைத் தொடர்புத்துறை என்பது ஒரு பெரிய முதலீடு மற்றும் மூலதனம் செலவிடப்படும் துறை என்று, மேலும் வரி அதிகமாக இருப்பது குறித்து கவலையை எழுப்பினார் சுனில் மிட்டல்.

நெட்வொர்க், ஸ்பெக்ட்ரம் (Spectrum) , கோபுரங்கள் மற்றும் தொழில்நுட்பம் (Technology) உள்ளிட்ட பல விஷயங்களை தொலைத் தொடர்புத் துறையில் முதலீடு செய்ய வேண்டும் என்று சுனில் மிட்டல் சுட்டிக்காட்டினார்.

டிஜிட்டல் இந்தியா:

தொழில் நிலையான வளர்ச்சியை அடையக்கூடிய விலை சரியான விகிதத்தில் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

மின் உற்பத்தி நிலையங்கள், எஃகு ஆலைகள் அல்லது சுத்திகரிப்பு நிலையங்களைப் போலவே தொலைத் தொடர்புத் துறையிலும் நிலையான முதலீடு தேவை என்று அவர் கூறினார். இதுவும் ஒரு முக்கியத்துறையாகும்,

இதில் ஒவ்வொரு ஆண்டும் புதிய தொழில்நுட்பத்திற்காக பில்லியன் கணக்கான டாலர்களை செலவிட வேண்டும் என்று சுனில் மிட்டல் கூறினார்.

ஒரு மாதத்தில் 160 ரூபாய்க்கு 16 ஜிபி டேட்டா கொடுப்பது கடினம் என்றும், அதை ரூ .200 அல்லது 300 ஆக அதிகரிக்க வேண்டும் என்று ஆகஸ்ட் மாதத்தில் தெரிவித்திருந்தேன்.

இந்த ஆண்டின் செப்டம்பர் காலாண்டில், ஏர்டெல் நிறுவனத்தின் ஒரு பயனரின் சராசரி வருவாய் ரூ .162 ஆகவும், ஜூன் மாதத்தில் இது ரூ .157 ஆகவும் இருந்தது என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம் என்று சுனில் மிட்டல் கூறினார்.

5ஜி சேவை

இந்தியாவில் 5ஜி ஸ்பெக்ட்ரம் விலை மிகவும் அதிகமாக உள்ளது. இதேவேளையில் இந்தியாவிற்கு 5ஜி கட்டாயம் தேவை, அதற்கான திட்டமிடல் கண்டிப்பாக அவசியம்.

Also Read: Elon Musk New Project: டெஸ்லா மீது பந்தயம்..! Elon Musk -ன் அடுத்த மாஸ்டர் பிளான் தான் என்ன?

ஆனால் உலக நாடுகளில் 5ஜி பயன்படுத்தும் பல நாடுகள் மிகவும் மிதமான வேகத்திலேயே 5ஜி டெலிகாம் சேவையை விரிவாக்கம் செய்து வருகிறது.

இதனால் இந்திய எந்த விதத்திலும் பின்தங்கவில்லை எனத் தெரிவித்துள்ளார் சுனில்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *