வேல்ஸ் கடற்கரையில் 11 மீட்டர் Skeleton..! என்னவா இருக்கும்..!

வேல்ஸ் கடற்கரையில் 11 மீட்டர் Skeleton..! என்னவா இருக்கும்..!

ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த பாலி பர்ன்ஸ் என்ற பெண் ட்விட்டரில், “எனது சகோதரி வேல்ஸ் கடற்கரையில் செல்லும்போது பெரிய கிட்டத்தட்ட 11 மீட்டர் இருக்கும் எலும்புக்கூட்டின்(Skeleton) ஒரு பகுதியைக் கண்டுபிடித்தார்.

Skeleton - newstamilonline

அவருக்கு யாராவது உதவ முடியுமா” எனக் கேட்டிருந்தார். அவரின் இந்தப் பதிவுக்குக் கிடைத்த ரெஸ்பான்ஸ் ட்விட்டரை அதகளப்படுத்திக் கொண்டிருக்கிறது.

இந்த மர்மமான எலும்புகளுக்கு உரிய விலங்கு என்னவாக இருக்கக்கூடும் என்று யூகங்கள் ஒருபுறம் இருக்க, சிலர் இதனை டைனோசர் வகையைச் சேர்ந்த நெஸ்ஸி என்று சொல்லி வருகின்றனர்.

பலரின் கருத்து இதுவாக இருக்கிறது. அதேபோல், ஒரு கடற்கரை திமிங்கலத்தின் எச்சங்கள்தான் அந்த பிரமாண்ட எலும்புகள் என்பது நெட்டிசன்கள் comments.

ஒரு ட்விட்டர் பயனாளர்.. `இது டைனோசர் வகையைச் சேர்ந்த நெஸ்ஸிதான்’ என்று கேலி செய்ய இன்னும் ஒருவரோ, “அது எதுவாக இருந்தாலும், அங்குள்ள நாய்க்கு வாழ்க்கையின் மிகச் சிறந்த நாள் போல் தெரிகிறது” என்று எலும்புத் துண்டையும் நாயையும் கேலி செய்திருந்தார்.

இந்தப் பதிவு தொடர்பாகப் பேசியிருக்கிற பாலி பர்ன்ஸ், “அது ஒரு திமிங்கலம் என்று நான் சந்தேகித்தேன். நான் ஒரு கடல் விஞ்ஞானி. ஆனால், அவற்றில் ஒரு நிபுணர் அல்ல.

எனவே, நான் அதை ட்வீட் செய்ய என் சகோதரிக்குப் பரிந்துரைத்தேன்.

இதன்மூலம் ட்விட்டர் சர்க்கிள் நண்பர்கள் மூலமாக ஏதேனும் பதில்களைக் கண்டுபிடிக்க முடியுமா என்று பார்க்க விரும்பியே அப்படி tweet செய்தேன்.

கடல் பாலூட்டிகள் பற்றிய எனது பல்கலைக்கழக விரிவுரையாளரை இதற்காக என்னுடன் சேர்த்துக்கொண்டேன்.

ஆனால், நாங்கள் நினைத்ததை விட எதிர்பார்த்ததை விட அதிகமானவர்கள் பதிலளிக்கத் தொடங்கினார்கள்.

அந்தப் பதிவை இவ்வளவு ட்ரெண்ட் செய்வார்கள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை” என்று ஆச்சர்யம் குறையாமல் பேசியிருக்கிறார்.

சிறுமியின் இந்த இடுகைக்கு 17,000 க்கும் மேற்பட்ட லைக்குகள், ஏராளமான கருத்துகள் மற்றும் ட்வீட்டுகள் கிடைத்தன.

இந்தப் புகைப்படத்தை எடுத்த PollyRose சகோதரி ஹன்னா சமீபத்தில் தனது காதலன் ஜான் மற்றும் அவர்களின் நாய் போனி ஆகியோருடன் கடற்கரையில் தனது வழக்கமான நடைப்பயணத்தில், சென்றபோது இந்தப் புகைப்படத்தை எடுத்திருக்கிறார்.

Also Read: Space force: 2030’க்குள் விண்வெளியில் தனி ராஜ்ஜியம் அமைக்க ரஷ்யா திட்டம்..!

இது தொடர்பாகப் பேசிய ஹன்னா, “நாங்கள் சில வாரங்களாக மட்டுமே தீவில் வசித்து வருகிறோம்.

இங்குள்ளவற்றைப் பற்றி ஆராய்ந்து மகிழ்கிறோம். இது ஒரு எதிர்பாராத கண்டுபிடிப்பு.

மேலும், நாங்கள் இங்கு இருப்பதன் மூலம் இங்குள்ள உள்ளூர்வாசிகளிடமிருந்து தீவுகளின் இயற்கை வரலாற்றைப் பற்றி அறிய மிகவும் அற்புதமான வாய்ப்பாகும்” என்று கூறியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *