இயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Zinc rich foods: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஜிங்க் உணவுகள் அவசியம்..!

Zinc rich foods: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஜிங்க் உணவுகள் அவசியம்..!

தற்போதைய வைரஸ் போன்ற மிகப்பெரிய சுகாதார பேரிடர் நிலவும் சூழ்நிலையில் நோய் எதிர்ப்பு சக்தி நமது உடலுக்கு மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது.

Zinc rich foods - newstamilonline

நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்திருக்க நாம் உண்ணக் கூடிய உணவில் ஜிங்க் என்று அறியப்படும் துத்தநாகம் இருக்க வேண்டும்.

அந்தவகையில், ஜிங்க் நிறைந்த உணவுகள் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தும் என்பதால், அந்த உணவுகள் என்னென்ன குறித்து தெரிந்துகொள்வோம்.

Zinc rich foods:

துத்தநாகம் எனும் ஜிங்க் ஒரு அத்தியாவசியமான மினரலாகும். இது பல உணவுப் பொருட்களில் அதிக அளவில் காணப்படுகின்றன.

இந்த ஜிங்க் மினரல் நமது நோயெதிர்ப்பு சக்தி, காயங்களை குணப்படுத்துதல் மற்றும் டிஎன்ஏ செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகுக்கிறது.

பெண்களுக்கு ஜிங்க் கர்ப்ப கால வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது. நமது நுகரும் உணர்வு மற்றும் சுவையை பராமரிக்க தினமும் ஜிங் சத்துள்ள உணவுகளை உட்கொள்வது அவசியமாகும்.

பெண்களுக்கு 8 மில்லி கிராமும், ஆண்களுக்கு 11 மில்லி கிராமும் ஜிங்க் அவசியம்.

Zinc rich foodsஷெல் மீன் :

கடல் வகை உணவுகளான ஷெல் மீன், சிப்பிகள் மற்றும் நண்டுகளில் ஜிங்க் அதிகளவு உள்ளது. குறைந்த கலோரியை கொண்டிருப்பதால் இதனை உணவாக அனைவரும் எடுத்துகொள்ளலாம்.

Zinc rich foodsபருப்பு / பயிறு :

பருப்பு மற்றும் பயறு வகையிகளில் அதிகளவு ஜிங்க் தாது உள்ளது. அவரை பருப்பு வகைகளான அவரை, துவரை, பீன்ஸ் போன்ற பருப்பு பயிறுகளில் 12 விழுக்காட்டுக்கும் அதிகமாக துத்தநாகம் உள்ளது.

Zinc rich foodsநட்ஸ் மற்றும் விதைகள் :

விதை வகைகளான ஆளி, பூசணி மற்றும் எள் போன்றவற்றில் துத்தநாக சத்து அதிக அளவில் உள்ளது.

அதாவது தினசரி தேவையான ஜிங்கில் 13% 2 மில்லி கிராம் விதைகளில் உள்ளது.

மேலும், இந்த விதைகளில் இரும்புச் சத்து, நார்ச் சத்து மற்றும் ஒமேகா -3 போன்ற கொழுப்பு அமிலங்களும் நிறைந்துள்ள.

முந்திரி, பாதாம் போன்ற பருப்புகளிலும் அதிகளவு துத்தநாகம் உள்ளது.

முட்டை :

குறைந்த அளவு கலோரி மற்றும் புரதம் நிறைந்த உணவு முட்டை தான் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று.

தினமும் முட்டையை உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் தினசரி தேவைக்கு தேவையான 5 சதவீத துத்தநாகம் நமக்கு கிடைக்கிறது.

இறைச்சி :

சிவப்பு இறைச்சிகளில் உடலுக்கு தேவையான அளவிலான துத்தநாக தாது கிடைக்கிறது.

ஆடு, மாடு மற்றும் கோழி இறைச்சிகளிலும் ஜிங்க் உள்ளது என்றாலும், இறைச்சி ஏற்ற அளவில் அவை மாறுபடும்.

அசைவ பிரியர்களாக இருந்தால் ஜிங் தேவைப்படும்போது, மட்டன் மற்றும் சிக்கனை சாப்பிடலாம்.

தயிர் :

தயிரில் ஜிங், கால்சியம், வைட்டமின்கள் பி- 2 மற்றும் பி- 12, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

ஒரு கப் தயிரில் சுமார் 20-லிருந்து 22 சதவீத ஜிங்க் அடங்கியுள்ளது. பாலை விட தயிர் எளிதில் ஜீரணம் ஆகிறது.

டார்க் சாக்லெட் :

அனைவராலும் விரும்பப்படும் டார்க் சாக்லேட்டில் தான் அதிக அளவிலான துத்தநாகம் நிறைந்துள்ளது.

அதாவது 100 கிராம் டார்க் சாக்லேட்டில் 30 சதவீதம் ஜிங் காணப்படுகிறது. மேலும், டார்க் சாக்லேட்டில் ஆன்டிஆக்ஸிடன்ட்களும் நிறைந்துள்ளதால் கொழுப்பின் அளவு மற்றும் இரத்த அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது.

ஓட்ஸ்:

முழு தானிய உணவான ஓட்சில் அதிக அளவிலான ஜிங் உள்ளது நிருபிக்கப்பட்டுள்ளது.

ஒரு கப் ஓட்சில் தினசரி தேவைக்கு போதுமான துத்தநாகம் 27 சதவீதம் (2.95 மிகி) கிடைக்கிறது.

Also Read: Keto Diet Dangers: கீட்டோ தலைவலியும், அதற்கான தீர்வும்..!

ஓட்ஸை காலை உணவாக எடுத்துக் கொள்வதன் மூலம் சுறுசுறுப்பும், ஒரு நாள் முழுமைக்கும் தேவையான சக்தியும் கிடைக்கிறது.

மேலும் துத்தநாகம் நிறைந்த உணவுகளை பெண்கள் தவறாமல் உட்கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் நோய்த்தொற்று காரணிகளை தடுக்கவும் உதவுகிறது.