Radish in Space: விண்வெளியில் வளர்த்த முள்ளங்கிகள் அறுவடைக்கு தயார் – NASA..!
Radish in Space: விண்வெளியில் வளர்த்த முள்ளங்கிகள் அறுவடைக்கு தயார் – NASA..!
நாசாவின் விண்வெளி வீரர்கள் இப்போது விண்வெளியின் மைக்ரோ கிராவிட்டியில் முள்ளங்கிகளை வளர்த்து சோதனை செய்து, அதை இப்பொழுது அறுவடை செய்யவும் தயாராக்கிவிட்டனர்.

Radish in Space:
இப்பொழுது விண்வெளியில் எந்த நாடு முதலில் சந்திரன் அல்லது செவ்வாய் கிரகத்தில் தனது காலனி அமைக்கப் போகிறது என்பதற்கான ஒரு அறிவியல் போர் நடைபெற்று வருகிறது.
ஆனால், விண்வெளியில் ஒரு காலனியை அமைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமில்லை.
விண்வெளியில் ஒரு காலனி அமைக்கும் பொழுது விண்வெளி வீரர்களுக்கு முக்கிய ஊட்டச்சத்துடன் கூடிய கூடுதலான தேவைகளை நாம் வழங்கவேண்டும்.
இந்த தேவையை ஒவ்வொரு முறையும் பூமியிலிருந்து அனுப்புவது என்பது நிரந்தர தீர்வாக அமையாது.
குறிப்பாக முன்மொழியப்பட்ட செவ்வாய் கிரக பணி இரண்டு ஆண்டுகள் நீடிக்கும் என்பதால் பூமியிலிருந்து தேவைகளை அனுப்புவது சரியான தீர்வாகாது.
சந்திரன் அல்லது செவ்வாயில் அமைக்கும் காலனியின் முக்கிய உணவு தேவைகளை வீரர்களே விவசாயம் செய்து வளர்ந்து நாகரிகத்தின் சாராம்சத்துடன் வாழ வேண்டும்.
இது புதிய உணவு, தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல், பூமியின் ஒற்றுமையையும் வேற்றுக்கிரகத்தில் உருவாக்க வேண்டும்.
இது வீரர்களுக்கு வீடு போன்ற மனநிலையை உருவாக்கி, அவர்களின் மனநிலையை ஆரோக்கியப்படுத்தும்.
ஐரோப்பாவின் கொலம்பஸ் தொகுதியில் அமைந்துள்ள நாசா சோதனை மையம் மைக்ரோ-கிராவிட்டியில் வளரும் தாவரங்களைப் பற்றிய ஆய்வு செய்து வருகிறது.
மிகவும் தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல், விண்வெளியில் வளரும் தாவரங்கள் நிலைத்தன்மைக்கும் பங்களிக்கின்றது.
சர்வதேச விண்வெளி நிலையத்தின் மைக்ரோ கிராவிட்டி நிலைமைகளில் வளரும் தாவரங்கள் ஆராய்ச்சியாளர்களை அணுகுமுறையை நன்றாக மாற்றியமைக்க அனுமதித்துள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஆராய்ச்சி மையங்களில் வளர்க்கப்படும் மைக்ரோ கிராவிட்டி தாவரங்கள், சிவப்பு மற்றும் நீல ஒளிக்கு சிறந்த முறையில் பதிலளிப்பதைக் காட்டியுள்ளது.
விண்வெளியில் தாவரங்களுக்கு மண்ணில் வேர்விடும் ஈர்ப்பு இல்லை என்பதால், விதைகள் “தலையணைகளில்” வளர்க்கப்படுகின்றன.
அவை உரங்களையும் நீரையும் வேர்களுக்குச் சமமாக விநியோகிக்க உதவுகின்றது என்று நாசா தெரிவித்துள்ளது.
விண்வெளியில் தாவரங்கள் வளர்ப்பதற்கு முடிவு செய்தபோது ஏன் முள்ளங்கிகள் தேர்ந்தெடுக்கப்பட்டது என்ற காரணத்தையும் நாசா விளக்கியுள்ளது.
குறுகிய சாகுபடி காலத்தைக் கொண்டிருக்கின்றன மற்றும் மரபணு ரீதியாக விண்வெளியில் அடிக்கடி ஆய்வு செய்யப்படும் தாவரமான அரபிடோப்சிஸுடன் (Arabidopsis) இவை ஒத்தவை.
முள்ளங்கிகளும் உண்ணக்கூடியவை மற்றும் பல ஊட்டச்சத்துக்களைக் கொண்ட சத்முள்ளங்கிகள் தான உணவாகும்.
விண்வெளியில் பயிரிடப்பட்ட இந்த தொகுதி முள்ளங்கிகள் இப்போது அறுவடைக்குத் தயாராக உள்ளது.
அறுவடை செய்யப்படும் முள்ளங்கி மாதிரிகள் ஆய்வுக்காகப் பூமிக்குத் திருப்பி அனுப்பப்படும் என்று நாசா தெரிவித்துள்ளது.
Also Read: SpaceX Rocket: கட்டுப்பாட்டை மீறும் SpaceX ராக்கெட்..! நிலவை தாக்குமா என்று கேள்வி..!
தாவரங்கள் எல்ஈடி விளக்குகள், நுண்ணிய களிமண், 180 க்கும் மேற்பட்ட சென்சார்கள் மற்றும் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு, நீர் மற்றும் உரங்களைச் சிறப்பாக விநியோகிக்கப்பட்டு, ஈரப்பதம் மற்றும் வெப்பநிலை அளவைக் கட்டுப்படுத்தி இந்த முள்ளங்கிகள் வளர்க்கப்பட்டுள்ளது.