Bad Smell From Mouth: எப்படி பல் துலக்கினாலும் வாயில் துர்நாற்றம் வீசுகிறதா..?

Bad Smell From Mouth: எப்படி பல் துலக்கினாலும் வாயில் துர்நாற்றம் வீசுகிறதா..?

வாய் துர்நாற்றம் ஆனது ஹலிடோசிஸ் என்று அழைக்கப்படுகிறது. சில பேருக்கு தினசரி பல் துலக்கி பற்களை பராமரித்து வந்தால் கூட வாய் துர்நாற்றம் என்பது சரி செய்ய முடியாத பிரச்சினையாக இருக்கும்.

Bad Smell From Mouth

Bad Smell From Mouth:

இதனால் அவர்கள் பொது இடங்களில் நிறைய சங்கடத்திற்கு உள்ளாவார்கள். மற்றவர்களின் கேளிக்கைக்கு ஆளாவார்கள்.

இந்த வாய்வழி பிரச்சினை பல காரணங்களால் உண்டாகிறது. வாய்வழி விரிசல், ஈறு கோளாறுகள், தவறான பற்களின் சுகாதாரம் இவற்றால் ஏற்படுகிறது என்கிறார் பல் மருத்துவர்.

உண்மையில் சொல்லப் போனால் எண்ணற்ற நுண்ணுயிரிகள் நம் வாயில் வாழ்கின்றன.

இவற்றில் சில ஈறு கோட்டின் அடியில் அல்லது ஈறுகளுக்கும் பற்களுக்கும் இடையில் உருவாகும் பாக்கெட்களில் காணப்படுகின்றன.

ஊட்டச்சத்து குறைபாடு, கட்டுப்பாடற்ற நீரிழிவு மற்றும் வாய் வறட்சி, தொண்டை வலி, குடல் புண்கள், அஜீரண ஸ்னாக்ஸ் மற்றும் லாக்டோஸ் சகிப்புத் தன்மையற்ற தன்மை போன்றவை அனைத்தும் பல் சுகாதார பிரச்சினைக்கு வழி வகுக்கும்.

பல் சொத்தை, உணவுத் துகள்கள் மாட்டிக் கொள்வது, மற்றும் ஈறு கோளாறுகள் போன்ற பல் கோளாறுகள் மூலமாகவும் துர்நாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

இப்பொழுது வாய் துர்நாற்றம் எதனால் ஏற்படுகிறது என அறிந்து கொண்டோம். இப்பொழுது அதை எப்படி தவிர்க்கலாம் என அறிவோம்.

நமக்கு வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் நாம் சரியாக பல் துலக்காதது தான் காரணம்.

எனவே முதலில் நாம் சரியாக பல் துலக்க வேண்டும். உங்கள் பல் மேற்பரப்புகளை ஒரு நாளைக்கு இரண்டு முறை துலக்குங்கள்.

ஈறுகள், எனாமலுக்கு உட்புற பகுதிகள், நாக்கு என அனைத்தையும் துலக்கி சுத்தமாக வைக்க வேண்டும்.

துர்நாற்றத்தை முற்றிலுமாக தவிர்க்க உங்க நாவின் முழு மேற்பரப்பையும் நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.

உணவுத் துகள்களை எடுக்கும் கருவி

பிளாசிங் என்பது பல் இடுக்குகளுக்கிடையே மாட்டிக் கொண்ட உணவுத் துகள்களை எடுக்கும் கருவியாகும்.

தினசரி ஒரு முறையாவது இந்த நூல் போன்ற அமைப்பை கொண்டு பல் இடுக்குகளுக்கிடையே உள்ள உணவுத் துகள்களை எடுங்கள்.

இதற்கு பொருத்தமான பிளாசிங் சாதனத்தை வாங்கி கொள்ளுங்கள்.

உங்க நாக்கை நீட்டி கண்ணாடியின் முன் நின்று பார்த்தால் தெரியும் நாக்கில் ஒருவித மாவுப் பொருட்கள் டெபாசிட் ஆகி இருக்கும்.

இதை நீங்கள் நாக்கு சுத்தப்படுத்தும் கம்பி கொண்டு துடைத்து எடுக்கலாம். இந்த மாவுப் பொருள் பாக்டீரியாவால் உண்டாகிறது.

எனவே ஸ்கிராப்பர் மூலம் உங்க நாவை மெதுவாக சுத்தம் செய்யுங்கள்.

உங்க வாய் துர்நாற்றத்தை போக்குவதில் உமிழ்நீர் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.

காரணம் வாயில் இருக்கும் உமிழ்நீர் தான் நம் வாயை சுத்தம் செய்கிறது. வறண்ட வாய் உங்களுக்கு வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.

எனவே உங்க உமிழ்நீர் சுரப்பை அதிகரிக்க சர்க்கரை அல்லாத மெல்லும் சிவிங்கத்தை பயன்படுத்தலாம். நிறைய தண்ணீர் குடியுங்கள்.

வெங்காயம் மற்றும் பூண்டு போன்ற கடுமையான மற்றும் காரமான உணவு வகைகள் உங்களுக்கு வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.

ஆரோக்கியமான உணவு வகைகளில் ஈடுபடுவது உமிழ்நீர் ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. கெட்ட பாக்டீரியாக்களை கழுவ உதவுகிறது.

கேரட், செலரி, வோக்கோசு போன்ற காய்கறிகளையும், மூலிகைகளையும் சாப்பிடுவதை நீங்கள் கருத்தில் கொள்ளலாம்.

உங்க வாய் வறட்சி தான் வாய் துர்நாற்றத்திற்கு வழி வகுக்கும். எனவே எப்பொழுதும் உங்களை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ளுங்கள்.

போதுமான அளவு திரவங்களை குடிப்பது பாக்டீரியா மற்றும் வாயில் உள்ள உணவுத் துகள்களை சுத்தம் செய்கிறது.

உணவுக்குப் பிறகு சர்க்கரை இல்லாத சுவிங்கத்தை மெல்லுங்கள். இது உங்க உமிழ்நீரை அதிகரிக்கவும், தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை வெளியேற்றவும், உணவுத் துகள்களை பல் இடுக்கில் இருந்து அகற்றவும் உதவுகிறது.

Also Read: Nilavembu Kashayam Uses: பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த நிலவேம்பு கசாயத்தின் நன்மைகள்..!

உங்க வாய்வழி ஆரோக்கியத்தை மேம்படுத்த தவறாமல் பல் மருத்துவரை அணுகுங்கள். அடிக்கடி பற்கள் பரிசோதனை பலனளிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *