News Tamil Onlineஇயற்கையோடு வாழ்வோம்சமையல் குறிப்புகள்செய்திகள்

Popcorn Time : உங்களுக்குப் பிடிச்ச பாப்கார்னை ஆரோக்கியமாக மாற்றுவதற்கான டிப்ஸ் இதோ..!

Popcorn Time : உங்களுக்குப் பிடிச்ச பாப்கார்னை ஆரோக்கியமாக மாற்றுவதற்கான டிப்ஸ் இதோ..!

திரையரங்கு சென்றாலும் சரி வீட்டில் எல்லாரும் சேர்ந்து TV பார்ப்பதாக இருந்தாலும் சரி பாப்கார்ன் இல்லாமல் இருக்காது.

Popcorn Time

Popcorn good for health:

அந்தளவுக்கு பாப்கார்ன் ஒரு சுவையான நொறுக்கு தீனி.

இந்த பாப்கார்ன்கள் சுவையாகவும் மொறுமொறுப்பாகவும் வித விதமான சுவையுடனும் இருப்பதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதை விரும்பி சாப்பிடுகின்றனர்.

அதனால் தான் என்னவோ கடைகளில் இந்த பாப்கார்னை விதவிதமான டேஸ்ட்டில் பாக்கெட்டுகளில் விற்பனை செய்கிறார்கள்.

ஆனால் இந்த பாக்கெட் உண்மையில் ஆரோக்கியமானதா? என்பது கேள்வியே.

பாப்கார்ன்கள் வெண்ணெய், உப்பு, சர்க்கரை மற்றும் மறைக்கப்பட்ட இரசாயனங்கள் ஆகியவற்றால் நிரப்பப்பட்டுள்ளது.

நாம் உண்ணும் பாப்கார்னை ஆரோக்கியமாக பெற சில டிப்ஸ்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.

பாப்கார்னில் பழங்கள் மற்றும் காய்கறிகளை விட ஆன்டி ஆக்ஸிடன்கள் அதிகளவில் உள்ளன. இது நார்ச்சத்துக்களின் சிறந்த மூலமாகும்.

ஏர் பாப் செய்யப்பட்ட பாப்கார்னில் பொதுவாக எந்த எண்ணெய்யும் சேர்க்கப்படுவதில்லை.

தயரிக்கும் முறை:

இதில் மிகக் குறைந்த கலோரிகளே உள்ளது. இந்த பாப்கார்னை நீங்கள் 10 நிமிடங்களில் தயாரித்து விடலாம்.

தேவை என்றால் மிதமான அளவில் எண்ணெய் சேர்த்து கொள்ளலாம்.

ஒரு குக்கர் மற்றும் மூடி, சிறுதளவு எண்ணெய் இருந்தால் போதும் சுவையான பாப்கார்னை நீங்கள் தயாரித்து விடலாம்.

அடுப்பில் பாப்கார்ன் தயாரிக்கும்போது வால்நட், வெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் சிறந்தது

Popcorn good for health: கனோலா எண்ணெய் கூட ஒரு சிறந்த வழியாகும்.

பாம் மற்றும் தேங்காய் எண்ணெய்யில் நிறைவுற்ற கொழுப்புச் சத்து இருப்பதால் குறைவாகப் பயன்படுத்துங்கள்.

சோளம், சூரியகாந்தி மற்றும் சோயாபீன் எண்ணெய்களை பாப்கார்னில் சேர்ப்பதை முற்றிலும் தவிர்க்கவும்.

Preparation Method

ஒரு கப் = 30 கலோரிகள்

ஒரு கப் வெறும் பாப்கார்னில் சுமார் 30 கலோரிகள் உள்ளன.

எனவே இதனுடன் இன்னும் நிறைய பொருட்களை சேர்க்கும் போது பிரச்சினைகளை சந்திக்க வாய்ப்பு உள்ளது.

இது உங்க கலோரி தேவைகளை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே கூடுதல் பொருட்களை சேர்ப்பதை தவிருங்கள்.

பொதுவாக மைக்ரோவேவ் பாப்கார்ன் ஆரோக்கியமற்றது.

இதில் பெரும்பாலும் நிறைய உப்புகள் சேர்க்கப்படுகிறது. இதனால் நீங்கள் நிறைய உடல் நல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

இதில் சுவை அதிகமாக இருப்பதால் மக்கள் இதையே நாடுகின்றனர்.

வெண்ணெய் பாப்கார்ன்:

பொதுவாக வெண்ணெய் பாப்கார்னை தான் அதிக பேர் விரும்புகின்றனர்.

இது மறைக்கப்பட்ட இராசயனங்களுடன் கலோரி தேவைகளுடன் வலம் வருகிறது.

எனவே பாப்கார்னில் அதிகளவு வெண்ணெய் சேர்க்காமல் 2 முதல் 3 டீஸ்பூன் மட்டுமே பயன்படுத்தவும்.

தியட்டரில் கொடுக்கப்படும் நிறைய பாப்கார்ன்களில் வெண்ணெய் சேர்த்து கொடுக்கப்படுகிறது.

கெட்டில் பாப்கார்னில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, உப்பு மற்றும் எண்ணெய் சேர்க்கப்படுகிறது.

இதில் குறைந்தளவு மட்டுமே சத்துக்கள் காணப்படுகிறது. இது உப்பின் தேவையையும் கலோரிகளையும் அதிகரிக்கிறது.

ஒரு நாளைக்கு 2300 மி. கி அளவு உப்பு போதுமானது. அதாவது ஒரு டீ ஸ்பூன் உப்பு போதுமானது.

எனவே கெட்டில் பாப்கார்னுக்கு செல்லும் போது முடிந்த அளவு உப்பை குறைத்துக் கொள்ளுங்கள்.

Butter Popcorn:

சர்க்கரை பாப்கார்ன் வேண்டாம்:

இராசயனங்கள் மற்றும் சர்க்கரை சேர்க்கப்படும் பாப்கார்ன் பக்கம் செல்லாதீர்கள்.

இனிப்பு பாப்கார்னை பெறும் போது எச்சரிக்கையாக இருங்கள்.

தேவையில்லாத மசாலா பொடிகள் சேர்ப்பதை தவிருங்கள்.

கேரமல் அல்லது டார்க் சாக்லேட் போன்ற இனிப்பு விருந்துகளை விரும்பாதீர்கள்.

உணவு பண்டங்களுக்கு மணமூட்டும் காளான் எண்ணெய் மற்றும் சீஸ் பொடிகள் போன்றவை ரசாயன மற்றும் செயற்கை சுவைகளிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.

எனவே பாப்கார்னை வாங்குவதற்கு முன்பு லேபிளை படித்து வாங்குங்கள்.

சூடான சாஸ்

சூடான சாஸைச் சேர்ப்பதன் மூலம் உங்கள் பாப்கார்னை ஆரோக்கியமான முறையில் மசாலா செய்யுங்கள்.

உங்கள் பாப்கார்னில் இரண்டு அவுன்ஸ் சீஸ் போட்டுக் கொள்ளலாம். பால்சாமிக் வினிகரைத் தூவவும் முயற்சி செய்யலாம்.

Also Read: இந்த உணவுகளை சாப்பிட்டால் சிறுநீரக கல் பிரச்சனை உருவாகுமாம்..!

ஊறுகாய் அல்லது ஜலபீனோ மிளகுத்தூள் கொண்டு உங்கள் பாப்கார்னை அலங்கரிக்கலாம்.

உங்களுக்கு நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை தர பாப்கார்னில் புரதத்தை சேர்க்கலாம்.

ஒரு தேக்கரண்டி வேர்க்கடலை வெண்ணெய், 2 அவுன்ஸ் சீஸ் போன்ற நீங்கள் விரும்பும் புரத மூலத்தை நீங்கள் சேர்க்கலாம்.

மேற்கண்ட விஷயங்களை பின்பற்றும் போது நீங்கள் ஆரோக்கியமான சிற்றுண்டியை பெற முடியும்.