Exercise Tips – தினமும் ஸ்கிப்பிங் செய்வதால் ஏற்படும் நன்மைகள்..!
Exercise Tips – தினமும் ஸ்கிப்பிங் செய்வதால் ஏற்படும் நன்மைகள்..!
பொதுவாக, உடற்பயிற்சி செய்வது நம் உடலை ஆரோக்கியம் ஆகவும் கட்டுக்கோப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது.

இது உடலில் உள்ள கூடுதல் கலோரிகளை எரிப்பதற்கான எளிதான மற்றும் விரைவான வழிகளில் ஒன்று ஆகும். இதில் ஸ்கிப்பிங்கும் ஒன்று.
இந்த ஸ்கிப்பிங் செய்வதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்பது உங்களில் பலருக்குத் தெரியாது.
அதைப் பற்றி தான் இந்தப் பதிவில் பார்க்கப்போகிறோம்.
கூடுதல் கொழுப்பை குறைக்கும்
Exercise Tips – நீங்கள் உங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் முதலில் ஸ்கிப்பிங்கை தேர்வு செய்யுங்கள்.
இந்த எளிதான உடற்பயிற்சி உங்களில் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்க உதவுவது மட்டுமின்றி, அழகான உடல் வாகை பெறவும் உதவுகிறது.
ஆனால் ஸ்கிப்பிங் மட்டும் செய்தால் போதாது? நிச்சயமாக உங்கள் ஆரோக்கியமான உணவு மற்றும் நல்ல தூக்கத்தில் கவனம் செலுத்துவதும் அவசியம்.
எந்தவொரு தீவிரமான உடல் செயல்பாடும் உங்களை சுறுசுறுப்பாக்கும். குறிப்பாக வலுவான உடலமைப்பை பெற உங்களுக்கு உதவும்.
தினமும் ஸ்கிப்பிங் செய்யும் போது உங்கள் மூளை மற்றும் உடல் பாகங்கள் இரண்டும் சம ஒருங்கிணைப்பில் செயல்பட்டு ஒத்திசைவில் இருக்கும்.
இது மன அமைதி, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
எலும்பு அடர்த்தியை அதிகரிக்கிறது.
எடை இழப்பு:
ஒரு மணி நேரத்திற்கு ஸ்கிப்பிங் செய்வதன் மூலம் கிட்டத்தட்ட 1,600 கலோரிகளை எரிக்கலாம்.
வெறும் 10 நிமிடங்களுக்கு ரோப் ஸ்கிப்பிங் செய்வது கிட்டத்தட்ட எட்டு நிமிடங்களில் ஒரு மைல் தூரம் ஓடுவதற்கு சமம் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.
பெண்களுக்கு சிறந்த பயிற்சி
ஸ்கிப்பிங் என்பது குறிப்பாக பெண்களுக்கு சிறந்த பயிற்சிகளில் ஒன்றாகும்.
நீங்கள் பலவீனமான எலும்புகள் மற்றும் மந்தமான வாழ்க்கை முறையுடன் போராடும் ஒருவராக இருந்தால், இந்த பயிற்சி உங்களுக்கு ஒரு மந்திரமாகும்.
ஏனெனில் ஸ்கிப்பிங் செய்வதால் உங்கள் எலும்புகள் பலமடைகிறது.
ஒருங்கிணைப்பு:
தவறாமல் ஸ்கிப்பிங் பயிற்சிகளைச் செய்வது நம் கைக்கும்-கண்ணுக்கும் ஆன ஒருங்கிணைப்பை மேம்படுத்தும்.
ஒளிரும் சருமத்தை பெற உதவுகிறது.
ஒவ்வொரு நாளும் வேலை செய்ய முடிக்கவே போதுமான நேரம் இருப்பதால் சிலர் தங்கள் சருமத்தை கவனிக்க தவறுகின்றனர்.
தினமும் காலையில் ஸ்கிப்பிங் செய்வதால், இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
இதனால் உங்கள் உடலில் உள்ள நச்சுகள் வெளியேறி உங்கள் சருமத்திற்கு பொலிவை அளிக்கிறது.
Also Read: Hibiscus டீ குடிச்சா உடம்புக்கு இவ்வளவு நன்மைகளா..?
உங்களை மகிழ்ச்சியாகவும் வைத்திருக்கிறது.
ஒவ்வொரு நாளும் ஸ்கிப்பிங்
நீங்கள் நாள் முழுவதும் நன்றாகவும், மகிழ்ச்சியாகவும் உணர விரும்பினால், ஒவ்வொரு நாளும் ஸ்கிப்பிங் செய்வதன் மூலம் தொடங்குங்கள்.
உங்கள் அன்றாட வழக்கத்தில் குறைந்தபட்சம் 15 நிமிடங்களை ஸ்கிப்பிங் செய்ய ஒதுக்கி கொள்ளுங்கள்.
ஒரு நல்ல பயிற்சிக்கு பிறகு, மகிழ்ச்சியான ஹார்மோன்களின் (எண்டோர்பின்கள்) வெளிப்பாடு உங்களை நாள் முழுவதும் மகிழ்ச்சியாகவும், புத்துணர்ச்சியாகவும் வைத்துக்கொள்ள உதவும்.