What is 5G Technology? விரைவில் வருகிறது..! அனுபவிக்க தயாராகுங்கள்..!
What is 5G Technology? விரைவில் வருகிறது..! அனுபவிக்க தயாராகுங்கள்..!
நாட்டில் அடுத்து வரப்போகும் மிகப்பெரிய தொழில்நுட்ப புரட்சி 5G புரட்சியாகத்தான் இருக்கும் என கூறப்படுகிறது.

What is 5G Technology?
இந்நாட்களில் 5G நெட்வொர்க் பற்றி அதிகம் விவாதிக்கப்படுகிறது. இந்த ஆண்டு நாட்டில் 5G நெட்வொர்க்கைத் தொடங்குவது குறித்தும் பேசப்படுகிறது.
ஆனால் இன்னும் பெரும்பாலான மக்களுக்கு 5G அம்சத்தின் நன்மைகளைப் பற்றி முழுமையாகத் தெரியவில்லை.
5G-யின் முக்கிய அம்சங்கள் மற்றும் இதனால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்வோம்.
பல பெரிய நிறுவனங்கள் 5G சேவைக்கான நடவடிக்கைகளில் முழு முனைப்புடன் ஈடுபட்டுள்ளன.
தகவல்களின்படி, 5G நெட்வொர்க் தற்போதைய 4G நெட்வொர்க்கை விட பல மடங்கு வேகமாக இருக்கும்.
தரவு பரிமாற்றம் 10 மடங்கு முதல் 100 மடங்கு வேகமாக இருக்கும்.
5G நெட்வொர்க் வந்த பிறகு, அனைத்து வீடியோக்களையும் சில நொடிகளில் YouTube அல்லது மற்ற தளங்களில் பதிவேற்றிவிடலாம்.
இப்போது உள்ள தளங்களில் வீடியோக்களைப் பதிவேற்றுவதற்கு அதிக நேரம் எடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அறிக்கையின்படி, 5G Network வந்த பிறகு, உங்கள் வீடியோ அழைப்புகள் இன்னும் சக்திவாய்ந்ததாக இருக்கும்.
அனைத்து வீடியோ அழைப்புகளிலும் காட்சிகள் மிகத் தெளிவாக இருக்கும்.
5G நெட்வொர்க், PUBG போன்ற ஆன்லைன் ஸ்ட்ரீமிங் கேம்களை விளையாடுபவர்களுக்கு ஒரு வரமாக இருக்கும்.
5G நெட்வொர்க்கில் நீங்கள் உயர் வரையறை விளையாட்டுகளை விளையாட முடியும்.
இந்நாட்களில் செல்ஃப் டிரைவிங் கார்கள் பற்றியும் அதிகம் பேசப்படுகின்றன.
5G நெட்வொர்க் செல்ஃப் டிரைவிங் வாகனங்களை இணைப்பில் வைக்கும்.
இதன் மூலம் சாலை விபத்துக்கள் குறிப்பிடத்தக்க வகையில் குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டி.வி.கள், குளிர்சாதன பெட்டிகள், ஏ.சி.கள், வாஷிங் மெஷின்கள் ஆகிய அனைத்தும் தொலைவில் அமைந்திருக்கும் ஒரு கருவியுடன் இணைக்கப்பட்டு, வெளியில் இருந்து கட்டுப்படுத்த முடியும்.
Smart Homes:
பொருட்களின் இணையம் (IOT) என்ற கருத்தியலின் அடிப்படையில் ‘ஸ்மார்ட் வீடுகள்’ திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனங்களுக்கு 5ஜி ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.
ரோபோடிக்ஸ் துறையில் 5ஜி தொழில்நுட்பம் பெரும்மாறுதல்களை ஏற்படுத்தும்.
ஆபத்துகளில் இருந்து மனிதர்களை மீட்டெடுக்கும் பணிகளில் ஈடுபடும் அரை தானியங்கும் ரோபோக்களை, அதிவேகமாக கட்டுப்படுத்த முடியும்.
மருத்துவத்துறையில் இந்த புரட்சிகரமான மாறுதல்களை ஏற்படுத்தி, தொலைதூரத்தில் இருந்து அறுவை சிகிச்சை செய்யும் தொழில்நுட்பத்தை சாத்தியப்படுத்தும்.
இந்தியாவில் செய்யப்படும் ஒரு அறுவை சிகிச்சையை, பிரிட்டனில் உள்ள ஒரு மருத்துவர் வழிநடத்த முடியும்.
இந்த தொழில்நுட்பம் நடைமுறையில் செயல்பட இன்னும் சில வருடங்கள் ஆகும்.
இந்த தொழில்நுட்பம் செயல்படுத்தப் படும்போது, இதை சுற்றி ஒரு புதிய அமைப்பு உருவாகும்.
2025–ல் இந்தியாவில் 5ஜி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 8.8 கோடியை எட்டும் என்று கணிக்கப்படுகிறது.
கம்பியில்லா அலைக்கற்றையில் உள்ள அதிவேக அதிர்வெண்களில் வலைப்பின்னல்கள் இயங்கும்.
அதிக எண்ணிக்கையிலான, சிறிய வடிவ ஆண்டனாக்களை பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் இணைப்புகளின் வேகத்தையும், திறனையும் அதிகரிக்கும்.
Also Read: Latest Robot Technology: பீட்சா தயாரிப்பதில் உள்ள சவால்களை தீர்க்கும் ரோபோ..!
4ஜி தொழில்நுட்பத்தின் மூலம் 10,000 உபகரணங்களை ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட வலைப்பின்னல் பகுதியில் இணைக்க முடியும்.
5ஜி மூலம் அதே பரப்பளவில் ஒரு கோடி உபகரணங்களை இணைக்க முடியும்.